அவர்கள் திருடர்கள்: 2 பிரபல நடிகர்களை விளாசிய கர்நாடக முதல்வர்
பெங்களூர்: நடிகர் யஷ் மற்றும் தர்ஷன் ஆகியோரை கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி திருடர்கள் என்று விளாசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதே தொகுதியில் கர்நாடக மாநில முதல்வர் ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகிலும் போட்டியிடுகிறார்.
சுமலதாவுக்கு கன்னட நடிகர்கள் யஷ், தர்ஷன் ஆகியோர் ஆதரவாக உள்ளனர்.

தர்ஷன்
நானும், யஷும் சுமலதாவுக்காக கடுமையாக உழைக்கும் எருதுகள் என்று தர்ஷன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் அவர்களை குமாரசாமி விளாசியுள்ளார். அந்த எருதுகள் நிலத்தை உழ பயன்படாது மாறாக விவசாயிகளின் பயிர்களை அழிக்கும். விவசாயத்தின் கஷ்டங்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாண்டியா
தர்ஷன் மாண்டியா மக்கள் பற்றி பேசிய வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் உலா வருகிறது. நாகரீகம் கருதி அந்த வீடியோவில் அவர் பேசியதை நான் தெரிவிக்க விரும்பவில்லை. மக்கள் மட்டும் அதை கேட்டால் அவரால் மாண்டியாவுக்கு செல்ல முடியாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமி
அது என்ன தர்ஷனுக்கு சேலஞ்சிங் ஸ்டார் என்று ஒரு பட்டம். அவர் தி பாஸ்(D Boss) ஆம். படங்களில் மட்டும் தான் அவர் தி பாஸ் . தர்ஷனும், யஷும் திருடர்கள் என்று குமாரசாமி விளாசியுள்ளார்.

பிரச்சனை
மாண்டியாவில் பிரச்சனை ஏற்பட்டபோது இந்த நடிகர்கள் எங்கிருந்தார்கள்?. பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்தார்களா? அந்த நேரத்தில் எங்கள் சி.எஸ். புட்டராஜு தான் மக்களுக்கு உதவினார் என்கிறார் குமாரசாமி.


Click it and Unblock the Notifications











