கர்நாடக தேர்தலில் வென்ற-தோற்ற நடிகர்-நடிகைகள்

By Siva

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்களில் அம்பரீஷ், உமாஸ்ரீ மற்றும் யோகஷ்வரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை பூஜா காந்தி டெபாசிட் இழந்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்தது. நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது. இந்த வெற்றிக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தான் காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் கன்னட சினிமா நடிகர், நடிககைளும் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். அதில் வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த நட்சத்திரங்ளை பார்ப்போம்.

மாண்டியாவில் அம்பரீஷ் வெற்றி

மாண்டியாவில் அம்பரீஷ் வெற்றி

மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்னட நடிகர் அம்பரீஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து அவர் சினிமாவுக்கு முழுக்குபோட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறார்.

குமாரசாமி மனைவியை தோற்கடித்த யோகேஷ்வரா

குமாரசாமி மனைவியை தோற்கடித்த யோகேஷ்வரா

ராம்நகர் தொகுயில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சென்னபட்னாவில் போட்டியிட்ட அவரது மனைவி அனிதா குமாரசாமி பிரபல கன்னட நடிகர் சி.பி. யோகேஷ்வராவிடம் தோல்வி அடைந்துள்ளார். பாஜகவில் இருந்த யோகேஷ்வரா ஷெட்டரின் மந்திரி சபையில் இருந்தவர். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் காங்கிரஸ் டிக்கெட் கொடுக்காததால் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

உமாஸ்ரீ வெற்றி

உமாஸ்ரீ வெற்றி

தெர்டல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கன்னட நடிகை உமாஸ்ரீ வெற்றி பெற்றுள்ளார்.

டெபாசிட் இழந்த பூஜா காந்தி

டெபாசிட் இழந்த பூஜா காந்தி

பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் ராய்ச்சூரில் போட்டியிட்ட பிரபல கன்னட நடிகை பூஜா காந்தி வெறும் 1,815 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X