ராஷ்மிகா மந்தனாவால் வாரிசு ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல்… நடிப்பதற்கும் தடை… டென்ஷனான விஜய்?
பெங்களூரு: விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தெலுங்கு திரையுலகம் விதித்த கட்டுப்பாடுகளால் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய சிக்கல் விஜய்யை டென்ஷன் ஆக்கியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் பேட்டி
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்தார். கடந்தாண்டு வெளியான புஷ்பா ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் கம்பேக் கொடுத்ததால், தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே, ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு தலை வலியாக அமைந்துள்ளது.

கன்னட திரையுலகில் எதிர்ப்பு
கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. அந்தப் படம் கொடுத்த அறிமுகத்தால் தான் ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து கன்னட திரையுலகை இழிவுப்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் பிரபலமான ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத்துள்ள ராஷ்மிகா, தான் அறிமுகமான முதல் கன்னட படத்தை யார் தயாரித்தது என தெரியாது என்பதுபோல கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு கன்னட திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாம்.

வாரிசு வெளியாக தடை?
நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து கன்னட திரையுலகை அவமதித்து வருவதால், அவரது படங்களை கன்னடத்தில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம். இதனால், விஜய்யுடன் அவர் நடித்துள்ள வாரிசு, கன்னடத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இப்போது தான் தெலுங்கில் வாரிசு ரிலீஸுக்கு எதிராக வந்த சிக்கல்களுக்கு தீர்வு எடுக்கப்பட்டது. நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் முன்னுரிமை என, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகை தொடர்ந்து கன்னடத்தில் நடிகை ராஷ்மிகா மூலம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்
வாரிசு ஷூட்டிங்கில் யானைகள் பயன்படுத்தப்பட்டதாக விலங்குகள் நல வாரியம் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது கர்நாடகாவில் வரிசு ரிலீஸாவதிலும் சிக்கல் உள்ளது. இதனால், விஜய் உச்சக்கட்ட டென்ஷனில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ராஷ்மிகாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் கன்னட திரையுலகம், அவர் கன்னட படங்களில் நடிக்கவும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாம். இதனால், ரஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட்டில் பலத்த அடிவிழும் என சினிமா ஆர்வலார்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











