மாநில அரசு விருதுக்கு நோ.. மன்னிப்பையும் நன்றியையும் மாற்றி மாற்றி சொன்ன கிச்சா சுதீப்!

பெங்களூர்: கன்னட நடிகராக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் கிச்சா சுதீப் கன்னட மொழியில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ள இவர் கன்னடத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

கர்நாடக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிச்சா சுதீப்பிற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதை மறுத்து மாநில அரசுக்கும் தேர்வு மன்ற உறுப்பினர்களுக்கும் கிச்சா சுதீப் கடிதம் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாகவே இத்தகைய விருதுகளை தான் பெறுவதில்லை என்ற முடிவை எடுத்து அதன்படி செயல்பட்டு வருவதாகவும் தன்னுடைய கடிதத்தில் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

kichcha sudeep state award best actor award

நடிகர் கிச்சா சுதீப்: கன்னடத்தில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகர் கிச்சா சுதீப். கன்னடத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் இவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இவரது பல கேரக்டர்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பெஸ்டாக அமைந்துள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநில அரசு சார்பில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த விருதை கிச்சா சுதீப் தற்போது நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மற்றும் தேர்வு குழுவிற்கு கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

மாநில விருது நிராகரிப்பு: அந்த கடிதத்தில், சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில அரசு விருதை பெற்றிருப்பதை உண்மையிலேயே பாக்கியமாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான நடுவர் மன்றத்திற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார். ஆயினும் பல ஆண்டுகளாகவே விருதுகளை பெறுவதை தான் நிறுத்தியதாகவும் இன்றும் அந்த முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் சுதீப் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள சுதீப், தங்களது நடிப்பில் முழு முயற்சியுடன் பணியாற்றும் பல தகுதியான நடிகர்கள் உள்ளதாகவும் அவர்களில் ஒருவர் இந்த விருதை பெறுவது தனக்கு மகிழ்ச்சியை தரும் என்றும் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட கிச்சா சுதீப்: மக்களை மகிழ்விப்பதற்கான தனது அர்ப்பணிப்பு எப்போதும் விருதுகளை எதிர்பார்க்காமல் இருந்து வருவதாகவும் கூறியுள்ள சுதீப், தான் தற்போது விருதை நிராகரிக்கும் முடிவை வெளிப்படுத்தியுள்ளதற்கு மாநில அரசிடமும் நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை பரிசீலனை செய்த நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசுக்கும் மீண்டும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அந்த கடிதத்தில் கிச்சா சுதீப் வெளிப்படுத்தியுள்ளார்.

kichcha sudeep state award best actor award

பயில்வான் படத்திற்கு விருது: கன்னட நடிகராக மாஸ் காட்டிவரும் சுதீப் தமிழில் புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்டபடங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டிற்கான மாநில விருதுகளை சில தினங்களுக்கு முன்பு கர்நாடக அரசு அறிவித்தது. இதில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுதீப்பின் பயில்வான் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை நிராகரித்தே அவர் தனதுஎக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X