Actor Vijay: புஷ்பா 2 ஷோவில் தளபதி விஜய்.. கர்நாடக ரசிகர்கள் வெறித்தனம்!

பெங்களூர்: நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடித்து வரும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்க்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் தளபதி 69 தான் தன்னுடைய இறுதி படம் என்று அவர் அறிவித்துள்ளது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

விஜய் தற்போது ஒரு படத்திற்கு 200 முதல் 250 கோடி ரூபாய்கள் வரை சம்பளமாக பெற்று வரும் சூழலில், அதை விட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த செயல்பாடு பல்வேறு தரப்பினரின்பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் சினிமா, அரசியல் என அடுத்தடுத்த தன்னுடைய வேலைகளில் தன்னை பிசியாக்கியுள்ளார் விஜய்.

vijay thalapathy 69 movie karnataka

நடிகர் விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகி வருகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அவரது இறுதி படம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்படியாக இந்த படத்தின் கதைக்களத்திலும் அரசியல் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சில மாதங்களில் தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இந்த படத்தின் ரிலீஸ் உறுதுணையாக இருக்கும் என்று விஜய் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தளபதி 69 படம்: சர்வதேச அளவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் ஒரு படத்திற்கு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆயினும் இவற்றை விட்டுவிட்டு அவர் அரசியலில் களமிறங்குவது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆயினும் பல ஆண்டுகளாக அவர் அரசியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தன்னுடைய தவெக கட்சியின் அறிவிப்பை வெளியிட்ட விஜய், தளபதி 69 படம் தான் தன்னுடைய இறுதி படம் என்றும் அறிவித்திருந்தார்.

சர்வதேச ரசிகர்கள்: அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறை பிரபலங்களும் அவர் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னதாக சினிமாவிலிருந்து ஏராளமான தலைவர்கள் உருவான நிலையில், அவர்கள் சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாக மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. ஆனால் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அதற்காக சினிமாவை துறக்கவுள்ளதாகவும் விஜய் செய்துள்ள முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. அவருக்கு தற்போதும் வெறித்தனமான ரசிகர்கள் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் காணப்படுகின்றன.

புஷ்பா 2 ஷோவில் விஜய்: கடந்த கோட் படத்தின் ஷூட்டிங்கின்போது கொச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் பட ஷூட்டிங் நடந்த நிலையில் அவரை நேரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஷோவில் நடிகர் விஜய்யின் பெரிய அளவிலான புகைப்படத்தை திரைக்கு முன்பு காண்பித்து கர்நாடக ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை பார்க்க முடிந்தது. தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த சம்பவம் அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X