twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!

    |

    சென்னை: தாண்டவ் வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்து கர்ணி சேனா அமைப்பு பகிரங்கமாய் மிரட்டியுள்ளது.

    நடிகர்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா மற்றும் கிருத்திகா கம்ரா ஆகியோர் நடித்த வெப் சீரிஸ் தாண்டவ்.

    காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்! காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!

    இந்த வெப் சீரிஸ் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் இந்து மதக் கடவுள்களை கேலி செய்யும் வகையில் இருப்பதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன.

    உணர்வுகளை புண்படுத்தும்

    உணர்வுகளை புண்படுத்தும்

    மேலும் இப்படி ஒரு வெப் சீரிஸை வெளியிட்ட அமேஸான் பிரைம் தளத்தை அன் இன்ஸ்டால் செய்யக் கோரி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு காட்கோபர் தொகுதி எம்.எல்.ஏ ராம் கதம் இந்தத் தொடர் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்பதால் அதை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    மத்திய அமைச்சருக்கு கடிதம்

    மத்திய அமைச்சருக்கு கடிதம்

    மேற்கு காட்கோபர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் பா.ஜ.க எம்.பி மனோஜ் கோடாக், மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இந்த வெப் சீரிஸ் தொடர்பாக கடிதம் எழுதினார்.

    இந்துக்களின் மனதை புண்படுத்தும்

    இந்துக்களின் மனதை புண்படுத்தும்

    அதில் அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கு தணிக்கை முறை கொண்டுவர வேண்டும். ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களில் வன்முறை, போதைப் பொருள்கள், வெறுப்பு, பாலியல் காட்சிகள் மற்றும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என தெரிவித்திருந்தார்.

    கர்ணி சேனா மிரட்டல்

    கர்ணி சேனா மிரட்டல்

    தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை அமைச்சகம், தாண்டவ் தொடர் தொடர்பாக அமேசான் ப்ரைம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் தாண்டவ் வெப் சீரிஸ் குழுவினருக்கு கர்ணி சேனா அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

    நாக்கை அறுத்தால்..

    நாக்கை அறுத்தால்..

    அதாவது, மகாராஷ்டிர கர்ணி சேனா தலைவர் அஜய் செங்கார், தாண்டவ் வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் அவமதிக்கும் நபர்களின் நாக்கை அறுக்கும் எவருக்கும் ஒரு கோடி ரூபாய் வெகுமதி அளிப்போம் என தெரிவித்துள்ளார்.

    பகிரங்க மிரட்டலால் பரபரப்பு

    பகிரங்க மிரட்டலால் பரபரப்பு

    மேலும் தாண்டவ் வெப் சீரிஸ் தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோரியிருந்தாலும் இது போதாது, அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கர்ணி சேனாவின் அஜய் செங்கார் கூறியுள்ளார். கர்ணி சேனா அமைப்பினரின் இந்த பகிரங்க மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Read more about: tandav web series karni sena
    English summary
    Karni Sena chief Ajay Sengar announces Rs 1 cr reward for anyone who slits tongue of those who insult Hindu gods in Tandav Web series. Filmmaker Ali Abbas Zafar debut web-series 'Tandav' released on Amazon last week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X