அக்ஷய் குமார் படத்துக்கு ஆபத்து.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கர்ணி சேனா எச்சரிக்கை

மும்பை: அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் பிருத்விராஜ் படத்திற்கு எதிராக கர்ணி சேனா அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பத்மாவத் படத்திற்கு என்ன நேர்ந்ததோ அதே தான் உங்களுக்கும் நேரும் என பகீரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கர்ணி சேனா அமைப்பினரின் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் சொல்லும் டைட்டில் மாற்றம் நிகழுமா என்கிற பரபரப்பு அதிகரித்துள்ளது.

அக்‌ஷய் குமார் படம்

அக்‌ஷய் குமார் படம்

யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் அக்‌ஷய் குமார், மானுஷி சில்லர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது பிருத்விராஜ் திரைப்படம். மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி வருகிறார்.

ராணி சம்யுக்தா

ராணி சம்யுக்தா

ராஜா பிருத்விராஜ் மற்றும் ராணி சம்யுக்தாவின் வாழ்க்கை வரலாற்றை முன்னிலைப்படுத்தி ஏகப்பட்ட வரலாற்று திரைப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உள்ளன. எம்.ஜி.ஆர், பத்மினி நடிப்பில் 1962ம் ஆண்டு தமிழிலேயே ராணி சம்யுக்தா படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், அந்த கதையில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.

உலக அழகி

உலக அழகி

கடந்த 2017ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற இந்திய அழகி மானுஷி சில்லர் இந்த படத்தில் ராணி சம்யுக்தாவாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் அறிமுக படமே அக்‌ஷய் குமாருடன் பிரம்மாண்ட கதையுடன் அமைந்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனக் கூறியுள்ளார்.

கர்ணி சேனா எச்சரிக்கை

கர்ணி சேனா எச்சரிக்கை

இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பிருத்விராஜ் படத்திற்கு தற்போது கர்ணி சேனா அமைப்பினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். படத்தின் டைட்டிலை மாற்றவில்லை என்றால் தீபிகா படுகோனேவின் பத்மாவத் படத்திற்கு நேர்ந்தது போல கடும் விளைவுகளை படக்குழு சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

பெயர் மாறிய பத்மாவத்

பெயர் மாறிய பத்மாவத்

பத்மாவதி எனும் பெயரில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கை வைத்து எடுத்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கர்ணி சேனா அமைப்பினர் கடும் பிரச்சனைகளை கிளப்பினர். உருவ பொம்மையை எரிப்பது, வழக்கு தொடர்வது, செட்களை நாசமாக்கியது என தொல்லை கொடுக்க கடைசியாக பத்மாவத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்த படம் வெளியானது.

டைட்டிலை மாத்துங்க

டைட்டிலை மாத்துங்க

ராஜா பிருத்விராஜ் சவுகான் எனும் டைட்டிலை படக்குழு வைக்க வேண்டும் என்றும், அது என்ன வெறுமனே பிருத்விராஜ் என டைட்டில் வைத்து மிகப்பெரிய அரசரை அவமரியாதை செய்கின்றீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்ணி சேனா அமைப்பினரின் இந்த எச்சரிக்கையை ஏற்று படக்குழு டைட்டிலை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X