கங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை

By Siva

மும்பை: மணிகர்னிகா படத்தை எதிர்க்கவில்லை, ஆனால் கங்கனா தொடர்ந்து எங்களை குறைகூறினால் அவரின் கெரியரை நாசமாக்கிவிடுவோம் என்று கர்னி சேனா அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு மணிகர்னிகா என்ற பெயரில் இந்தியில் படமாகியுள்ளது. கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு கர்னி சேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று கங்கனா கூறினார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையும் வெளியிட்டார்.

சென்சார்

சென்சார்

மணிகர்னிகா படத்தை பார்த்து நான்கு வரலாற்று நிபுணர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சென்சார் போர்டு சான்றிதழ் அளித்துள்ளது. இது குறித்து கர்னி சேனாவிடம் தெரிவித்தும் தொடர்ந்து பிரச்சனை செய்கிறார்கள். அவர்கள் இதை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் ஒவ்வொருவரையும் அழித்துவிடுவேன் என்று கங்கனா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மறுப்பு

மறுப்பு

மகாராஷ்டிரா மாநில கர்னி சேனா தலைவர் அஜய் சிங் செங்கர் கூறியிருப்பதாவது, கங்கனா தொடர்ந்து எங்கள் அமைப்பினரை மிரட்டினால் அவரை மகாராஷ்டிராவில் நிம்மதியாக நடக்க விட மாட்டோம், அவரின் பட செட்டுகளை தீ வைத்து எரிப்போம். படத்தில் ஜான்சி ராணியை அவமதித்திருந்தால் இந்து சமூகம் அவரை மன்னிக்காது என்றார்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

மணிகர்னிகா படத்தில் ஜான்சி ராணி வெளிநாட்டவரை காதலித்தது போன்று காட்டியிருந்தாலோ அவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சிகள் இருந்தாலோ பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கர்னி சேனா அமைப்பு மணிகர்னா படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் கூறியிருப்பதாவது, படத்தை விளம்பரம் செய்ய கங்கனா எங்கள் அமைப்பின் பெயரை பயன்படுத்துகிறார். மணிகர்னிகா படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X