Karthi 26: ‘வா வாத்தியாரே..’ MGR ஸ்டைலில் கார்த்தி 26 டைட்டில்... வெளியானது மாஸ் அப்டேட்!
சென்னை: கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார் கார்த்தி.
அவரது நடிப்பில் இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ஜப்பான் திரைப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி உடன் இணைந்துள்ளார் கார்த்தி.
இந்தப் படத்தின் டைட்டில் முதல் ரிலீஸ் தேதி வரையிலான அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கார்த்தி 26 டைட்டில் அப்டேட்
பருத்தி வீரன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான கார்த்தி, தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். சின்ன பட்ஜெட்டில் சூப்பர் ஹிட் படங்கள் கொடுப்பதில் கார்த்தி தான் ஸ்பெஷலிஸ்ட். தயாரிப்பாளர்களின் ஹீரோவாக கலக்கி வரும் கார்த்தி, இதுவரை 24 படங்களில் நடித்துவிட்டார். அவரது 25வது படமான ஜப்பான், அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகிறது.
ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படம் கமர்சியலாக உருவாகியுள்ளதாம். ஜப்பான் பட வேலைகளை முடித்துவிட்ட கார்த்தி, தனது 26வது படத்தில் பிஸியாகிவிட்டார். இதனை நலன் குமாரசாமி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 'கார்த்தி 26' படத்தின் ஷூட்டிங் தொடங்கியதோடு, இதன் டைட்டில் பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் கார்த்தி எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்து வருகிறாராம். அவருடன் ஆனந்த்ராஜ்ஜும் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. கார்த்தி ஜோடியாக க்ருத்தி ஷெட்டியும் தாத்தாவாக ராஜ்கிரணும் நடிக்கின்றனர். அதேபோல், வில்லன் கேரக்டரில் சத்யராஜ் நடிப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறாராம்.
கார்த்தியும் ஆனந்த்ராஜ்ஜும் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்து வருவதால் இந்தப் படத்திற்கு 'வா வாத்தியாரே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோவும் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானதும், கார்த்தி 26 பற்றிய அபிஸியல் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமாக நடைபெற்று வரும் கார்த்தி 26 படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பருக்குள் முடியும் என தெரிகிறது. அதேபோல், இந்தப் படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு பிளான் செய்துள்ளதாம். தீபாவளிக்கு ஜப்பான், அடுத்தாண்டு பிப்ரவரியில் வா வாத்தியாரே என ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் கார்த்தி.


Click it and Unblock the Notifications