Karthi: பெரிய இடத்து ஹீரோவுக்கு முன்னுரிமை... நேரம் பார்த்து டீலில் விட்ட கார்த்தி!

சென்னை: கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ராஜூ முருகன் இயக்கும் இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.

இந்நிலையில், கார்த்திக்காகவே கதையுடன் காத்திருந்த இயக்குநருக்கு கடைசி நேரத்தில் நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநரை டீலில் விட்ட கார்த்தி:கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டருக்கு செம்ம ரீச் இருந்தது. இந்நிலையில், தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

 Karthi: Actor Karthi refused Arunraja Kamarajs film

ராஜூ முருகன் இயக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறதாம். இதனையடுத்து கைதி 2, சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார் கார்த்தி. அதேநேரம் ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தில் இருந்து கார்த்தி விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

கனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். ராஜா ராணி, மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் அருண்ராஜா. இன்னொரு பக்கம் பீட்சா முதல் விஜய்யின் மாஸ்டர் வரை பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எல்லாவற்றையும் விட சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் கனா படத்திற்குப் பின்னர் கார்த்தியிடம் ஒரு கதை கூறி கால்ஷீட் வாங்கி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்தப் படத்தின் நாயகி, வில்லன் என அனைவரையும் ஓக்கே செய்து வைத்திருந்தனர். மேலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தார் அருண்ராஜா காமராஜ். அப்போது தான் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாம்.

நெஞ்சுக்கு நீதியில் உதயநிதி ஹீரோவாக நடித்ததால் கார்த்தி படத்தை அப்போதைக்கு ட்ராப் செய்தார் அருண்ராஜா. அதன்பின்னர் நெஞ்சுக்கு நீதி படமும் வெளியாகி எதிரபார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதோடுவிடாமல் அடுத்தடுத்து அமெரிக்கா மாப்பிள்ளை, லேபில் ஆகிய வெப் சீரிஸ்களையும் இயக்க சென்றுவிட்டார் அருண்ராஜா. இதனால், கார்த்தி ரொம்பவே கடுப்பாகிவிட்டாராம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கார்த்தியை சந்தித்த அருண்ராஜா, அவரது படம் குறித்து கேட்டுள்ளார். ஆனால், உடனடியாக பதில் ஏதும் கூறாத கார்த்தி, அருண்ராஜா காமராஜ் போனதும் தனது முடிவை தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் இப்போதைக்கு நடிப்பது கஷ்டம் என ஒரு மெசேஜ் மட்டும் தட்டிவிட்டாராம். அதேநேரம், கார்த்தி இப்படி யாரையும் நோஸ்கட் செய்பவர் கிடையாது எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X