அதுக்குள்ளேவா..? கார்த்தியின் 'தம்பி'யை ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்

By

Recommended Video

CLIMAX செஞ்சுட்டாங்க | THAMBI MOVIE PUBLIC OPINION | FILMIBEAT TAMIL

சென்னை: கார்த்தி நடித்துள்ள தம்பி படத்தை, தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படம், தம்பி. சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இவர், மோகன்லால், மீனா நடித்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இதை தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.

இன்று ரிலீஸ்

இன்று ரிலீஸ்

இதையடுத்து தமிழில் அவர் மீண்டும் இயக்கியுள்ள படம், தம்பி. வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆனது.

ட்விட்டரில் பாராட்டு

ட்விட்டரில் பாராட்டு

படம் நன்றாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டி எழுதி வருகின்றனர். காமெடி த்ரில்லர் படமான இது முதல்பாதியில் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் இருக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைப்பதாக, ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

இதற்கிடையே, வழக்கம் போல தங்கள் வேலையை காட்டிவிட்டது தமிழ் ராக்கர்ஸ். கருணையே இல்லாமல் அனைத்துப் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், இந்தப் படத்தையும் ஒரு நாள் கூட விட்டு வைக்கவில்லை.

தயாரிப்பாளர் அதிர்ச்சி

தயாரிப்பாளர் அதிர்ச்சி

படம் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் வெளியிட்டுவிட்டனர். இதனால் தம்பி படத்தின் தயாரிப்பாளர்களான வயாகாம் 18 நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X