கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்
சென்னை: கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள கைதி படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகிலுடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் மோத தயாராகிவிட்டது.
மாநகரம் என்னும் முதல் படத்தின் மூலம் பிரபலமடைந்த லோகேஷ் இரண்டு வருடங்கள் கழித்து இயக்கிய படம் கைதி. இது தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக எந்த ஹீரோயினும் இன்றி தமிழ் சினிமாவில் ஒரு புதுமுயற்சியை கையாளுகின்றனர். கார்த்தியுடன் நரேன், தீனா, ரமணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க சத்ய சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் அன்பறிவ் சண்டைபயிற்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தை குழந்தைகளும் பெற்றோர்களும் இணைந்து பார்க்கலாம்.
இப்படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான கைதி வெளியாவதற்கு முன்பே விஜய்யை வைத்து அவரது 64வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகிலுடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் மோத தயாராகிவிட்டது.


Click it and Unblock the Notifications











