twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா

    |

    Recommended Video

    Kaithi Box Office:குவியும் கூட்டம், அள்ளும் வசூல்

    சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் வெற்றிக்கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மக்களின் ஏகபோக ஆதரவைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இந்த அளவுக்கு மிகப் பெரிய பாராட்டை பெறுவதற்கு மற்றொரு காரணம், இந்த படத்தை சரியான முறையில் தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான். இவர்களின் பந்தம் சகுனியில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.

    கைதி படம் ரிலீஸாகி மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தை இயக்கி இருந்தார் மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கைதி பட திரைக்கதையும் மாநகரம் பட திரைக்கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான்.

    Karthi and SR Prabhu alliance became the triumphant coalition of Tamil cinema

    கைதி படத்தில் பத்து வருட சிறைவாசம் முடிந்து வரும் கைதி, தனது மகளை பாரக்க செல்கிறார். அதே நேரத்தில் டன் கணக்கில் போதை பொருளை பிடித்து வைத்திருக்கும் போலீஸ், அதனை கைப்பற்ற துடிக்கும் ஒரு கும்பல், இப்படி படம் பல மனிதர்களின் சந்திப்பு அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்று நேர்மறையான திரைக்கதையிலே உருவாகி இருக்கும்.

    இந்தப் படம் இந்த அளவுக்கு மிகப் பெரிய பாராட்டை பெறுவதற்கு மற்றொரு காரணம், இந்த படத்தை சரியான முறையில் தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவருடைய தயாரிப்பு நிறுவனம் பெயர் டீரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ். இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களை விநியோகித்து வந்தார்.

    இவர் ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரித்த சில படங்களை விநியோகித்துள்ளார். நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஷ் பாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் சூது கவ்வும் போன்றவை முக்கியமான படங்களாகம். சூது கவ்வும் படம் பிரபுவிற்கு மிகப் பெரிய லாபத்தை ஈட்டி தந்தது.

    வாவ்! சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள்.. விட்டு விட்டு மழை பெய்யும்.. வெதர்மேன்

    இவரின் முதல் நேரடி தயாரிப்பு காரத்தி நடித்த சகுனி படமாகும். அதற்குப் பிறகு ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தை தயாரித்திருந்தார். மீண்டும் கார்த்தி நடித்த காஷ்மோரா படத்தை தயாரித்து இருந்தார். இவர் கார்த்தியின் படங்களையே முழுவதுமாய் தயாரிக்க காரணம் இவருக்கும் கார்த்திக்கும் இருக்கும் கதைதேர்வு ஒற்றுமை என்று பலரும் கூறுகின்றனர்.

    அதையும் தாண்டி இவர்கள் உறவினர்களும் கூட. மேலும் அருவி படத்தை தயாரித்திருந்தார். அந்த படம் ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை மட்டும் ஈட்டாமல் ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரையும் வாங்கி தந்தது. அதற்கு பிறகு எச்.வினோத் இயக்கி கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி அடைந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தையும் எஸ்.ஆர்.பிரபுவே தயாரித்து இருந்தார்.

    அதோடு, என்.ஜி.கே ,ராட்சசி, கைதி படங்களையும் சமீபத்தில் தயாரித்து உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம், எஸ்.ஆர்.பிரபு மற்றும் இவரது தம்பி எஸ்.ஆர்.பிரகாஷ் கீழ் இயங்கி வருகிறது. எஸ்.ஆர்.பிரபு பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திலும் தயாரிப்பு வேலைகளை இணைந்து செய்துள்ளார். அந்த நிறுவனம் தான் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாநகரம் படத்தை தயாரித்து இருந்தது.

    பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் மாநகரத்தை தவிர்தது மாயா, மான்ஸ்டர் படங்களை தயாரித்திருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு அடுத்தாக கார்த்தியின் சுல்தான் படத்தையும் தயாரித்து வருகிறார். சுல்தான் படத்திற்கும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

    English summary
    The film Kaitha, which was created under the aegis of actor Karthi and producer S.R.Prabhu, is successfully running in theaters with the support of the people. Another reason why the film is so acclaimed is that S.R.Prabu is the right maker of the film. Their relationship began in the film 'Saguni' and continues till today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X