ஜோதிகா குழந்தைகளின் பாக்கெட் மணி எல்லாம் எங்கே போகுது? லேட்டா தெரிந்து கொண்ட சித்தப்பா!

சென்னை: நடிகர் சூர்யா தான் நேற்று முதல் டிரெண்டிங்கில் இருக்கிறார். அவரது அகரம் பவுண்டேஷன் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா நேற்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி புறநகர் சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இப்படி இருக்கும்போது, இதில் கலந்து கொண்ட சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சூர்யா - ஜோதிகா தம்பதியரின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் குறித்து பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழாவில் சூர்யா பேசுகையில், " அகரத்தை முதலில் தொடங்கும் போது எங்களிடத்தில் எண்ணம் மட்டும்தான் இருந்தது, பணம் இல்லை. இதற்கு முன்னர் நாங்கள் மலைவாழ் மக்கள் படிக்கும் அரசு பள்ளிகளை தத்தெடுத்து பார்த்துக் கொண்டோம். பள்ளி மாணவர்களுக்காக ஹீரோவா ஜீரோவா என்ற குறும்படமும் எடுத்தோம். அதில் விஜய், மாதவன், ஜோதிகா நான் என நால்வரும் நடித்தோம்.

Karthi Appreciates Suriya Jyothika Daughter Diya Son Dev Pocket Money Contribution To Agaram Foundation

6000 மாணவர்கள்: அகரம் தொடங்கும் போது 100 குழந்தைகளின் கல்விக்கு உதவலாம் என முடிவெடுத்து, தமிழ்நாடு முழுவதும் தேடினோம். ஆனால் 160 குழந்தைகளுக்கு நாங்கள் கல்வி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி இருக்கும்போது, நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டு, மாணவர்களுக்கு கல்வி கொடுத்தோம். இன்றைக்கு இந்த 15 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அகரம் மூலம் கல்வி பெற்றுள்ளார்கள்" என்று பேசினார்.

கார்த்தி: அதேபோல் கார்த்தி பேசும்போது, " அகரம் தொடங்கும்போது எங்களிடத்தில் பணம் இல்லை. அப்போது அண்ணி ஒன்று கூறினார்கள். நாம் என்ன எல்லாத்தையும் பணத்தை வைத்தா தொடங்கினோம். அன்பைக் கொண்டுதானே தொடங்கினோம். அன்பைக் கொண்டே தொடங்குவோம் என்று கூறினார். அண்ணி அன்றைக்கு அப்படி சொல்லவில்லை என்றால் இன்றைக்கு இது சாத்தியமா என்று தெரியாது.

Karthi Appreciates Suriya Jyothika Daughter Diya Son Dev Pocket Money Contribution To Agaram Foundation
Photo Credit:

ஜோதிகா: கொரோனா காலத்தில் பல மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் இல்லை என்று எங்களின் அகரம் மாணவர்கள் மூலம் தகவல் தெரிந்தவுடன் நான் செய்கிறேன் என்று முன் வந்தார் அண்ணி. எனக்கு இப்போதுதான் தெரியும் அகரத்தின் மாதம் 300 என்ற திட்டத்திற்கு, தியாவும் தேவ்வும் தங்களது பாக்கெட் மணியை கொடுத்து வருகிறார்கள் என்று. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அகரத்திற்கு பணம் மட்டுமல்ல உங்களின் நேரமும் அன்பும் மிகவும் தேவைப்படுகிறது. எனவே அதை நீங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அகரம் எங்களுடையது என்பதைக் காட்டிலும் அகரம் நம்முடையது என்று மாறவேண்டும்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு, இதில் ஜோதிகா - சூர்யா தம்பதியரின் குழந்தைகளான தேவ் மற்றும் தியாவின் பாக்கெட் மணி அகரத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது என்பது தெரிந்த ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X