Karthi: கார்த்தியை சமாளிக்க இவரால் தான் முடியும்... 96 பட இயக்குநரின் மாஸ்டர் பிளான்!
சென்னை: கார்த்தி தற்போது ராஜூமுருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2வில் நடிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 96 பட இயக்குநர் சி பிரேம்குமாருடன் ஒரு படத்தில் இணையவுள்ளார் கார்த்தி.
கார்த்தி நடிக்கவுள்ள இந்தப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி 27 அப்டேட்: பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக கலக்கிய கார்த்தி, அடுத்து ஜப்பான் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். ஜப்பான் மேட் இன் இந்தியா என்ற பஞ்ச் டயலாக் உடன் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2-வில் நடிக்கவுள்ளார் கார்த்தி. ஜப்பான் கார்த்தியின் 25வது படமாகவும், கைதி 2 அவரது 26வது படமாகவும் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்தியின் 27வது படத்தை சி பிரேம்குமார் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட்டான 96 படத்தின் இயக்குநர் தான் சி பிரேம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது இரண்டாவது படமாக கார்த்தி 27 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்போது இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பது யார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கார்த்தி 27 படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாக்லேட் ஹீரோவாக திரையுலகை கலக்கி வந்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அரவிந்த் சாமிக்கு இந்தப் படம் மிகப் பெரிய கம்பேக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனி ஒருவனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் அரவிந்த் சாமி, சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், முதன்முறையாக கார்த்தியுடன் அவர் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அபிஸியலான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. ஜப்பான், கைதி 2 படங்களின் படப்பிடிப்பு முடியும் போதுதான், கார்த்தி 27 அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











