ஆந்திராவில் தடைசெய்யப்பட்ட புற்றுநோயை விளைவிக்கும் பூச்சிக்கொல்லி நமக்கு வேண்டாம்: கார்த்தி
பூச்சிக்கொல்லி மருந்து பற்றி கார்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
சென்னை: நடிகர் கார்த்தி புற்றுநோயை விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி தேவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார்.

தற்போது குலுமணாலியில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தார்.
இப்போது, புற்றுநோயை விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திர அரசின் ஆணை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கிளைபோசைட் சூத்திரத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதை சார்ந்த மூலக்கூறுகள் அடங்கிய பூச்சிக்கொல்லிகளும் உடனடியாக புற்றுநோயை விளைவிக்கும் அபாயம் கொண்டவை. அதனால் கிளைபோசைட் தொடர்புடைய பூச்சிக்கொல்லிகளை உர விற்பனையாளர்கள் மற்றும் மருந்து விற்பவர்கள் விற்கக்கூடாது என ஆந்திர அரசு தடை வித்தித்துள்ளது.
கிளைபோசைட் வகை பூச்சிக்கொல்லிகள் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளன. அவற்றை தடைசெய்து மக்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில் கார்த்தி இதை பகிர்ந்துள்ளார். தற்போது ஆந்திராவில் தடைசெய்யபட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுவிட்டது. தமிழக அரசும் தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
பல்வேறு சமூக அக்கறையுள்ள விஷயங்களை செய்துவரும் கார்த்தி ஸ்டாப் இயக்கத்தையும் முன்னெடுத்துள்ளார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை விடுத்து, பாரம்பரிய முறைக்கு மாறும் முயற்சியை அதன் மூலம் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











