இன்றைய சினிமா ரேஸ்: ராமானுஜன், நளனும் நந்தினியும், சூரன், பப்பாளி

By Mayura Akilan

ஞான ராஜசேகரன் இயக்கியுள்ள ராமானுஜன், லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள நளனும் நந்தினியும், மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்திருக்கும் பப்பாளி, கரண் ஹீரோவாக நடித்துள்ள சூரன், ஆகிய நான்கு நேரடி தமிழ் திரைப்படங்கள் இன்று வெளியாகின்றன.

இதோடு இந்தமாதம் 15க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரேஸில் தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் கஞ்சா கருப்பும் இருக்கிறார்.

கணிதமேதையின் வரலாறு

கணிதமேதையின் வரலாறு

கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் படம் என்பதால் ராமானுஜன் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல நளனும் நந்தினியும் பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

கரண் - மிர்ச்சி செந்தில்

கரண் - மிர்ச்சி செந்தில்

கரண் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் படம் சூரன் இன்று ரிலீஸ் ஆகிறது. அதேபோல சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் ஹீரோவாக நடித்த பப்பாளி படமும் இன்றைய சினிமா ரேஸில் உள்ளது.

தனுஷ் – ஜெயம் ரவி

தனுஷ் – ஜெயம் ரவி

அடுத்த வாரம் அதாவது ஜூலை 18ம் தேதி தனுஷ் தயாரித்து, நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவியின் பூலோகம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

ஜிகர்தண்டா 25ல் ரிலீஸ்

ஜிகர்தண்டா 25ல் ரிலீஸ்

ஜூலை 25ம் தேதி சித்தார்த் ஹீரோவாக நடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா, நவீன் சந்திரா நடித்துள்ள சரபம் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகைக்கு

ரம்ஜான் பண்டிகைக்கு

ரம்ஜான் பண்டிகையன்று சலீம், மெட்ராஸ், சதுரங்க வேட்டை உள்ளிட்ட மூன்று படங்கள் தமிழில் வெளியாக உள்ளன. தமிழில் ஏற்கனவே விஜய் ஆண்டனி தயாரிப்பில் 'நான்' வெற்றியடைந்ததை ஒட்டி 'சலீம்' படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

கார்த்தியின் மெட்ராஸ்

கார்த்தியின் மெட்ராஸ்

கார்த்தியின் வித்தியாச நடிப்பு எனவும் , மேலும் இப்படத்தின் பாடல்கள் ,மற்றும் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் 'மெட்ராஸ்' படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அரை டஜன் படங்கள்

அரை டஜன் படங்கள்

இந்தப் படங்கள் தவிர கஞ்சா கருப்பு தயாரித்து நடித்துள்ள வேல்முருகன் போர்வெல் மற்றும் அரைடஜன் சிறு முதலீட்டு படங்களும் இம்மாதம் வெளிவரத் தயாராக இருக்கின்றனவாம். மொத்தத்தில் 15க்கும் மேற்பட்ட படங்கள் இம்மாதம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X