Karthi birthday: கார்த்தி பிறந்தநாள்.. அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்ட மெய்யழகன் டீம்!
சென்னை: நடிகர் கார்த்தி நாளைய தினம் தன்னுடைய 47வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி இன்றைய தினம் அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள கார்த்திக் 27 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. மேலும் படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
96 படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்த்தி 27 படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் முன்னணி கேரக்டர்களின் இணைந்துள்ளனர். இந்நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி -இயக்குனர் பிரேம்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெய்யழகன். கார்த்தி 27 படமாக உருவாகி வந்த இந்த படத்தின் டைட்டில் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து பர்ஸ்ட் லுக் மற்றும் 2வது லுக் போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் 96. விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய அதிர்வுகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியிருந்தது.
கார்த்தி பிறந்தநாள்: ந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது மெய்யழகன். 96 படம் கொடுத்த சிறப்பான வெற்றியை தொடர்ந்து மெய்யழகன் படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படம் அதை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இருவருக்கும் சமமான கேரக்டர்கள் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதையொட்டியே காணப்பட்டது. கார்த்தியின் பிறந்த நாள் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள சூழலில் இன்றைய தினம் மாலை 5 மணி மற்றும் 7 மணி என கார்த்தி 27 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்த போஸ்டர்கள்: இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் மெய்யழகன் என்று அறிவிக்கப்பட்டது. அதனுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் தற்போது ஏழு மணியளவில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி காளை மாடுடன் நெருக்கமாக கொண்டாட்டத்துடன் காணப்படுவதாக உள்ளது. இந்த படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்வியை இந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

மெய்யழகன் டைட்டில்: அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக இணைத்து வருகிறார் நடிகர் கார்த்தி. மெய்யழகன் மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26 படத்திலும் அவர் கவனம் செலுத்திவந்த நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் சர்தார் 2 படத்தின் சூட்டிங்கும் துவங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்கள் வெளியான சூழலில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜப்பான் படம் சொதப்பியது. இந்நிலையில் அவரது அடுத்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











