இந்த நேரத்துல இது தேவையா? மாளவிகாவுக்கு ரிப்ளை போட்ட கார்த்தி சிதம்பரம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனின் மகளான மாளவிகா மோகனன் மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் மாளவிகா மோகனன் போட்ட ட்வீட்டுக்கு கீழ் உடனடியாக கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ள கமெண்டை பார்த்த ரசிகர்கள் அவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

ஏமாற்றிய தனுஷ்

ஏமாற்றிய தனுஷ்

ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மாளவிகா மோகனனுக்கு விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததுமே ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஃபாலோயர்கள் ஆனார்கள். அடுத்ததாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில், அந்த படம் படுதோல்வியை சந்தித்ததால் கடும் வேதனைக்குள்ளானார் மாளவிகா மோகனன்.

கட்டுக்கடங்காத கவர்ச்சி

கட்டுக்கடங்காத கவர்ச்சி

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த அந்த ஒரு காட்சியை பயங்கரமாக ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். நடிப்பைத் தாண்டி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே அவரை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கவர்ச்சியில் சமீபத்தில் அவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் எல்லாம் இணையத்தை கண்டமேனிக்கு சூடாக்கின.

நல்ல படமா இருந்தா சொல்லுங்க

நல்ல படமா இருந்தா சொல்லுங்க

வீட்டில் சும்மா இருந்து போரடித்து வரும் நிலையில் ஓடிடியில் வெளியான பல படங்களையும், வெப்சீரிஸ்களை பார்த்து தீர்த்து விட்ட மாளவிகா மோகனன், ஏதாவது நல்ல படம் அல்லது வெப்சீரிஸ் இருந்தா சொல்லுங்களேன் போர் அடிக்குதுன்னு ரசிகர்களிடம் கேட்க ஏகப்பட்ட ரசிகர்கள் பல சஜஸன்களை கொடுத்து வந்தனர். அதில், கார்த்தி சிதம்பரம் போட்ட ட்வீட் தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கார்த்தி சிதம்பரம் ட்வீட்

கார்த்தி சிதம்பரம் ட்வீட்

நடிகை மாளவிகா மோகனன் மற்றும் தனுஷ் நடித்த மாறன் உள்ளிட்ட பல படங்களை ரசிகர்கள் சொல்லி மாளவிகா மோகனனை கலாய்த்து வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் மாளவிகா மோகனன் ட்வீட்டுக்கு கீழ் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள 'Inventing Anna' எனும் வெப்சீரிஸை பாருங்கள் என சொன்னதுமே ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் கார்த்தி சிதம்பரத்தை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

குவியும் ட்ரோல்கள்

குவியும் ட்ரோல்கள்

"பார்லிமெண்ட் அனுப்பி மக்கள் பிரச்சனை பேச சொன்னா இந்த ஆளு நடிகைக்கு என்ன படம் பாக்கலாம்னு சொல்லி tweet போட்டுகிட்டு இருக்கார்" என்றும் மாளவிகா மோகனன் உங்களை மதிக்கவே இல்லை. அங்க ரெய்டு நடந்துட்டு இருக்கு, இந்த நிலைமைல உங்களுக்கு இது தேவையா? என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஜென் நிலை

ஜென் நிலை

உண்மையிலேயே ஜென் நிலை என்பது இதுதான் என இப்படியொரு சூழ்நிலையிலும் எப்படி உங்களால இப்படி கூலா இருக்க முடியுது என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஒரு எம்பி செய்யுற வேலையா இதெல்லாம் என கண்டபடி கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X