அதைப் புடிச்சுத் தொங்குறாரே கார்த்தி.. என்னா ஒரு ஆசை பாருங்க.. நமட்டுச் சிரிப்பில் ரசிகர்கள்!
சென்னை : கார்த்தி நடித்த பல படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. பல படங்களில் கமிட் ஆகி இருப்பதால் நடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் கார்த்தி. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்து முடித்துள்ள சுல்தான் படம் கோடை விடுமுறைக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ள சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தொடர்ந்து மெகா ஸ்டார்களை வைத்து மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, ரியாஸ் கான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தான் புளியமரத்தில் தொங்கியபடி இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார். அத்துடன், எனக்கு மிகவும் பிடித்த புளியமரத்தில் சின்ன வயசில் பல முறை ஏற முயற்சித்துள்ளேன். ஒருவழியாக இன்று ஏறி விட்டேன். அப்புச்சி கிராமம் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
கார்த்தியின் இந்த பதிவிற்கு பல ரசிகர்கள், அவர் இன்னும் குழந்தை தனமாக இருக்கிறார் என்பது போன்ற ஜாலியான கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். ஏராளமானோர் லைக் செய்து, பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











