twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் கார்த்தியின் 14 ஆண்டுகள்...மனதில் நச்சென பதிந்த 5 படங்கள்

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்பால் பெயர் வாங்கிய நடிகர்களில் கார்த்தியும் ஒருவர். தொடர்ச்சியாக புதுவிதமான கதைகளை தேர்வு செய்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். கார்த்தி நடிக்க வந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டது.

    கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் ரிலீசாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவர் இதுவரை 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் கார்த்தியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட 5 படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பருத்திவீரன்

    பருத்திவீரன்

    முதல் படத்தில் நடிப்பதற்கு முன் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி தனது திறமையை வளர்த்துக் கொண்டவர் கார்த்தி. டைரக்டர் அமீர் இயக்கத்தில் அவர் நடித்த படம் பருத்திவீரன். துடிப்பான, முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக அந்த படத்தில் நடித்திருப்பார். கார்த்தியின் அழுத்தமான, யதார்த்தமான நடிப்பால் அப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படம் பல விருதுகளை அள்ளிக்குவித்தது.

     மெட்ராஸ்

    மெட்ராஸ்

    பல கமர்ஷியல் படங்களில் நடித்த பிறகு கார்த்தி நடித்த ஆக்ஷன் த்ரில்லர் படம் மெட்ராஸ். பா.ரஞ்சித் இயக்கிய இப்படம், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடப்பட்டது. ஆனால் ரிலீசான பிறகு ஒவ்வொருவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது. இப்படத்திற்கு சிறந்த நடிப்பிற்கான பிலிம்பேர் விருதினை கார்த்தி பெற்றார். சூப்பர்ஸ்டார் ரஜினியும் இப்படத்தை மிகவும் பாராட்டினார்.

    தீரன் அதிகாரம் ஒன்று

    தீரன் அதிகாரம் ஒன்று

    சிறுத்தை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. நிஜத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து ஹச்.வினேத் இயக்கிய இந்த படம் கார்த்தியின் யதார்த்த நடிப்பை வெளிக்காட்ட மற்றொரு வாய்ப்பாக அமைந்தது. ஆக்ஷன், ரொமான்ஸ் என கலந்து, பலமுறை பார்க்க தூண்டும் விதமாக இந்த படம் அமைந்தது.

    கடைக்குட்டி சிங்கம்

    கடைக்குட்டி சிங்கம்

    கார்த்தி, டைரக்டர் பாண்டியராஜ் உடன் இணைந்து பணியாற்றி கிராமத்து குடும்ப படம் தான் கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயியாக நடித்த கார்த்தி, யதார்த்தமான வசனங்களால் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை கூறி இருப்பார். வசனத்துடன் படத்தில் நடித்த ஒவ்வொருவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பும் இப்படத்திற்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. கார்த்தியின் குறிப்பிட்டு சொல்லும் படங்களில் ஒன்றாக இது அமைந்தது.

     கைதி

    கைதி

    மிகப் பெரிய வெற்றி அடைந்து, வசூலை குவிக்கும் என்ற நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட படம் கைதி. அந்த நம்பிக்கையை உண்மையாக்கும் வகையில் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை இப்படம் பெற்றது. கார்த்தியின் கைதி பெரிய வசூல் படமாக அமைந்தது. ஒரு ராத்திரியில் நடக்கும் நிகழ்வுகளை மிக அழகாக லோகேஷ் கனகராஜ் படமாக்கி இருந்தார். கார்த்தி அதற்கு முன் நடிக்காத தோற்றத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட கைதி படம், பலரின் பாராட்டையும் பெற்றது.

    English summary
    Today marks the release of Karthi's debut film 'Paruthiveeran', and the actor completes 14 years in cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X