"அந்தச் சாதனை அரசியலிலும் தொடரட்டும்.." - கமலுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி

By Vignesh Selvaraj

மதுரை : நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சி, சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை அறிவிக்க இருக்கிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல். பிறகு, தனது சொந்த ஊரான பரமக்குடிக்குச் சென்று மக்கள் மத்தியில் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

Karthi congrats kamalhaasan

அங்கிருந்து, மானாமதுரை வழியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கும் கமல், சற்று நேரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அவரது அரசியல் என்ட்ரிக்கு அரசியல் வாதிகளும், திரைத்துறையினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி, கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் சென்று பல சாதனைகள் படைத்தவர் நீங்கள். அந்த சாதனை அரசியலிலும் தொடரட்டும்." என்று கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல் கட்சியை அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், ஆரவ் ஆகியோரும் கமல் தொடங்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X