சூர்யாவின் ரெட்ரோ ஆடியோ லாஞ்ச்.. கார்த்தியின் மகள் தாத்தாவுடன் வந்தது ஏன்?.. ஓஹோ அதுதான் விஷயமா?
சென்னை: நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் நடைபெற்றது. 7 ஆயிரம் ரசிகர்கள் வந்திருக்கின்றனர் என சூர்யா பேசியிருந்தார். நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
ஆனால், நடிகர் கார்த்தியின் மகள் உமையாள் தாத்தா சிவகுமாருடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் கார்த்தி மகள் மட்டும் இசை வெளியீட்டு விழாவுக்கு க்யூட்டாக வந்திருக்கிறாரே என்ன விஷயம் என கேட்கத் தொடங்கி விட்டனர்.

நடிகர் கார்த்தி நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாத நிலையில், தான் அவருக்கு பதிலாக அவரது மகள் வந்திருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சபரி மலை சென்ற கார்த்தி: பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததில் இருந்தே கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவரும் நல்ல நண்பர்களாகவே மாறிவிட்டனர். இருவரும் இணைந்து ஒன்றாக சபரி மலைக்குச் சென்ற நிலையில், நேற்று நடைபெற்ற சூர்யாவின் ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் கார்த்தியால் வரமுடியவில்லை. முன்னதாக நடைபெற்ற சூர்யாவின் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கங்குவா படத்திலும் கிளைமேக்ஸில் கேமியோ ரோலில் அவர் நடித்திருந்தார்.
கார்த்தியின் மகள் செம க்யூட்: நடிகர் கார்த்தி ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அவருக்கு உமையாள் என்கிற பெண் குழந்தையும் கந்தன் என்கிற மகனும் உள்ளனர். நேற்று நடைபெற்ற ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பங்கு பெற முடியாத சூழலில் அவருக்கு பதிலாக அவரது மகள் உமையாள் பங்கேற்றதும் தாத்தா சிவகுமார் பேத்தியை பத்திரமாக அழைத்துச் சென்ற காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
சூர்யாவின் சகோதரி: சிவகுமார், உமையாள் மட்டுமின்றி சூர்யாவின் சகோதரி பிருந்தாவும் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார். கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜோஜு ஜார்ஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்ட அந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனா இணைந்து தொகுத்து வழங்கினர்.
சூர்யா ஃபேமிலி மிஸ்ஸிங்: நடிகை ஜோதிகா மும்பையில் பிசியாக உள்ள நிலையில், அவர் ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. மேலும், சூர்யாவின் மகள் தியா மற்றும் தேவும் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால், சூர்யா மேடையேறி பேசும் போது என்னோட கண்ணாடிப்பூ ஜோதிகா என பேசியதும் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினர்.
வா வாத்தியாரே எப்போ வரும்?: கங்குவா படத்தின் தோல்விக்குப் பிறகு கங்குவா 2 படம் உருவாவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி விட்டது. கார்த்தியின் வா வாத்தியாரே படம் பொங்கலுக்கே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கு முன்னதாக சர்தார் 2 தான் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











