கூஸ்பம்ப்ஸ்.. டிபார்ட்மென்ட் இல்லாத ஐஏஎஸ் அதிகாரி தான் வந்தியத்தேவன்.. கார்த்தியின் நச் பேச்சு!
சென்னை: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரவிவர்மன், தோட்டா தரணி உள்ளிட்ட படக்குழுவினர் மட்டுமே இந்த டீசரி வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை போலவே செம காமெடியாக பேசி விட்டு சென்றுள்ளார்.

பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், மோகன்லால், மகேஷ் பாபு, ரக்ஷித் ஷெட்டி மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்களால் வெளியிடப்பட்டு தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. ரசிகர்கள் டீசரை பெரிதும் எதிர்பார்த்த நிலையில், பிரம்மிக்க வைத்து விட்டார் மணிரத்னம்.

கூஸ்பம்ப்ஸா இருக்கு
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பாரதி பாஸ்கர் மற்றும் ஜெயமோகன் பேசிய நிலையில், அதன் பிறகு நடிகர் கார்த்தி மேடை ஏறி பேசினார். கூஸ்பம்ப்ஸ் என்று ஆரம்பித்த அவர், இந்த இடத்தில் வந்து நிற்பதே கூஸ்பம்ப்ஸாகத்தான் இருக்கு, படிப்பை முடிச்சுட்டு வெறும் பேக் மாட்டிக் கொண்டு மணிரத்னம் சார் கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா போன எனக்கு இன்னைக்கு வந்தியத்தேவன் கதாபாத்திரம் கிடைச்சிருக்கு என்றார்.
The moment #Vanthiyathevan inviting #Kundavai on stage😍 and the crowd whistles for her entry🔥
— Vishnu Suriya Karthi ™️ (Vishnusuriyatcr) July 8, 2022
Watch #SouthQueen trishtrashers speech at #PonniyinSelvanTeaser launch event❤️ #Trisha #TrishaKrishnan #PonniyinSelvan #PS1 Karthi_Offl pic.twitter.com/f35UMkEV4i
டிபார்ட்மென்ட் இல்லாத ஐஏஎஸ்
மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எப்படி நடிக்கப் போறேன்னு தெரியலையே.. அவர் பற்றிய எந்த ஐடியாவும் இல்லையே என புலம்பும் போது நண்பர் ஒருவர் சொன்னார், வந்தியத்தேவன் ஒரு ஐஏஎஸ் மாதிரி எல்லாத் துறையிலும் ஆளுமை இருக்கும். குதிரை ஏறுவார், வாள் சண்டை போடுவார், ஜாலமாக பேசி பலரையும் மயக்குவார். ஆனால், அவருக்கு குறிப்பிட்ட எந்தவொரு டிபார்ட்மென்ட்டும் இருக்காது என்றார் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டேன் என கார்த்தி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

எல்லாருமே கம்பெனி ஆர்ட்டிஸ்ட்
தமிழ் சினிமாவின் பெருமை என அழைக்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மொத்தமும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் தான் என்றும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர். படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களே கலந்து கொள்ளாதது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. விக்ரமுக்கு உடல்நிலை சரியில்லை, பார்த்திபன் இரவின் நிழல் புரமோஷனில் உள்ளார். ஐஸ்வர்யா ராய்க்கு ஃபிளைட் கிடைக்கவில்லையா? எனக் கேட்கின்றனர். அட்லீஸ்ட் சூர்யாவாவது வந்திருக்கலாமே என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











