‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி: ஜோடி லட்சுமிமேனன்

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அட்டக்கத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி மேற்கொண்டு வெற்றிக் கண்டவர் இயக்குநர் ரஞ்சித். தற்போது ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் புதிய படத்திற்கான வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி படங்கள்....

கார்த்தி படங்கள்....

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா', வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி' என கைவசம் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன கார்த்திக்கு. தீபாவளிக்கு ‘ஆல் இன் ஆல் அழகுராஜா'வும், பொங்கலுக்கு ‘பிரியாணி'யும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சுமிமேனன் ஜோடி....

லட்சுமிமேனன் ஜோடி....

தற்போது கார்த்தி, ‘அட்டக்கத்தி' பட இயக்குனர் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

விரைவில் அறிவிப்பு....

விரைவில் அறிவிப்பு....

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக டி.ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தேர்வு நடைபெற்று வருகிறது. படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்த பருத்திவீரன்....

அடுத்த பருத்திவீரன்....

தனது அடுத்த படம் நிச்சயம் கிராமத்துக் கதையாகத் தான் இருக்கும் என கார்த்தி தெரிவித்த கருத்தினால், இப்படம் கார்த்திக்கு மற்றுமொரு ‘பருத்திவீரனாக' அமையலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X