ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் ரஜினி போன்று டான்ஸ் ஆடிய கார்த்தி
சென்னை: ஆல் இன் அழகு ராஜாவில் ஒரு பாடலுக்கு கார்த்தி ரஜினிகாந்த் போன்று டான்ஸ் ஆடியுள்ளாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களை பலர் அதே பெயர்களில் ரீமேக் செய்கிறார்கள். ஆனால் கார்த்தியோ சற்று வித்தியாசமானவர்.
ரஜினி படங்களின் பெயர்கள், அவர் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆகியவற்றை தனது படங்களின் தலைப்புகளில் பயன்படுத்தி வருகிறார்.

நான் மகான் அல்ல
கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த படம் நான் மகான் அல்ல. இந்த படத்தின் தலைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பாகும்.

அலெக்ஸ் பாண்டியன்
மூன்று முகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த ரஜினியின் பெயர் தான் அலெக்ஸ் பாண்டியன். இந்த பெயர் கார்த்தி படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது.

ரஜினி
கார்த்தி நடித்த சகுனி படத்தில் சந்தானத்தின் பெயர் ரஜினி ஆகும். கார்த்தியின் பெயர் கமல் ஆகும்.

காளி
ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் காளி. இதுவும் ரஜினி பட தலைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி டான்ஸ்
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் 1980களில் ரஜினி படங்களில் வருவது போன்று ஒரு பாடலை எடுத்துள்ளார்களாம். அந்த பாட்டில் கார்த்தி ரஜினி போன்று உடை அணிந்து சூப்பர்ஸ்டாரை நமக்கு நினைவூட்டும் வகையில் ஆடியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











