வா வாத்தியார் அப்போ டிசம்பர் 5 வராதா?.. திடீரென ஸ்டூடியோ க்ரீன் அறிவிப்பு.. ரசிகர்கள் அப்செட்!
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என முன்னதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது. ஆனால், தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அறிவிப்பில் டிசம்பர் ரிலீஸ் என மட்டுமே போட்டதை பார்த்து கார்த்தி ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.
ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த சூர்யாவின் கங்குவா படம் படுதோல்வியை சந்தித்ததில் இருந்தே அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீது சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தியை காட்டி வந்தனர்.

இந்நிலையில், கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், டிசம்பர் மாதம் கூட இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பது தான் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
தள்ளாடும் தமிழ் சினிமா: இந்த 2025ம் ஆண்டு முழுவதுமே தமிழ் சினிமா ரொம்ப டல்லாகவே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்கள் மட்டுமே தியேட்டர் ஓனர்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. பல பெரிய படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், ரசிகர்கள் தியேட்டர் பக்கம் போவதையே நிறுத்திவிட்டு ஓடிடியிலேயே டாப் நடிகர்களின் படங்களையே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். நவம்பர் மற்றும் டிசம்பரில் பெரிதாக எந்தவொரு படமும் வராது என்றும் முடிவே கட்டிவிட்டனர்.
வா வாத்தியார், எல்ஐகே: டிசம்பர் மாதம் 5ம் தேதி கார்த்தியின் வா வாத்தியார் படமும் டிசம்பர் 18ம் தேதி பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இரு படங்களை தயாரித்த படக்குழுவும் இதுவரை பெரிதாக எந்தவொரு ப்ரோமோஷன் வேலைகளிலும் ஈடுபடவில்லை. இன்னமும் ஓடிடி, சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றும் தியேட்டரை மட்டும் நம்பி எப்படி படத்தை வெளியிடுவது என்கிற நிலையில் தான் ரிலீஸ் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
வா வாத்தியார் தள்ளிப்போகிறதா?: இன்று வெளியான அறிவிப்பில் வா வாத்தியார் படத்தின் தெலுங்கு டைட்டில் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் ரிலீஸ் என்று போட்டதை பார்த்த உடனே ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். சொன்னது போல டிசம்பர் 5ம் தேதி ஏன் படத்தை வெளியிட வில்லை என்றும் டிசம்பர் 32 நல்ல நாள் என ரசிகர்கள் கடுப்பில் பொங்கியுள்ளனர். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி பல வருடங்கள் கழித்து இயக்கிய வா வாத்தியார் திரைப்படம் டிசம்பர் மாதம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்துக்கு போட்டியாக வெளியாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், வா வாத்தியார் தமிழ் வெர்ஷன் ரிலீஸ் பற்றி இந்த அறிவிப்பில் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











