Karthi - கார்த்தியை அப்செட்டாக்கிய சூர்யா ரசிகர்கள்?.. ஜப்பான் ஆடியோ லான்ச்சில் இதுவும் நடந்துச்சா?
சென்னை: Karthi (கார்த்தி) ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா ரசிகர்களால் கார்த்தி அப்செட்டாகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. முதல் படமே அவரது நடிப்புக்கு சவாலான படமாக இருந்தாலும் அதை மிகச்சிறப்பாகவே செய்தார். இதனால் பருத்திவீரனில் இருந்தே கார்த்தி கவனிக்கப்படும் நடிகராக மாறினார். அதற்கு அடுத்ததாக அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், பையா போன்ற படங்களும் ஹிட்டடிக்க முதல் மூன்று படங்களிலேயே முன்னணி ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார் கார்த்தி.

கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டு: கார்த்திக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகின. அதுமட்டுமின்றி மூன்று படங்களுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் எல்லோருக்கும் ஃபேவரைட் என்பதால் கார்த்தியை மேலும் பலர் ரசிக்க ஆரம்பித்தனர்.
கார்த்தி நடிக்கும் ஜப்பான் படம்: அவர் தற்போது குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்திருக்கிறார். படமானது தீபாவளியை முன்னிட்டு நவம்பர் பத்தாம் தேதி ரிலீஸாகிறது. இப்படம் கார்த்திக்கு 25ஆவது படமாகும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் மட்டுமின்றி ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டனும் ஜப்பானில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜுமுருகன் இயக்கம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
இசை வெளியீட்டு விழா: இந்த சூழலில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் சூர்யா, லோகேஷ் கனகராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சூர்யா பங்கேற்றதால் அவரது ரசிகர்களும் விழாவுக்கு அதிக அளவு வந்திருந்தார்கள்.
அப்செட்டான கார்த்தி?: இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்களால் கார்த்தி அப்செட்டாகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அந்த விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் டிடி. அவர் ஒவ்வொருவரையாக மேடைக்கு பேச அழைத்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நிகழ்ச்சியின் நடுவிலேயே சூர்யாவை அவர் அழைத்துவிட்டாராம்.
சூர்யாவும் உடனே மேடை ஏறி சிறப்பாகவே பேசிவிட்டு கிளம்பினார். ஆனால் சூர்யா அரங்கத்திலிருந்து கிளம்பியவுடன் அதிகளவு இருந்த சூர்யாவின் ரசிகர்களும் பெரும்பாலானோர் கிளம்பிவிட்டார்களாம். இதன் காரணமாக மற்றவர்கள் பேசும்போது அரங்கமே களையிழந்து இருந்ததாக கார்த்தி கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











