சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் கமிட் ஆனது கார்த்தி தானாம்: அப்போ ஆர்யா நடிக்க என்ன காரணம்?

சென்னை: கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

Recommended Video

Karthi Speech | விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு... Viruman Success meet *Kollywood

விருமன் திரைப்படம் இன்று காலை யூடியூப் தளத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனிடையே, சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க முதலில் கார்த்தி தான் கமிட் ஆகியிருந்தது இப்போது தெரியவந்துள்ளது.

கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் கார்த்தி

கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் கார்த்தி

சினிமாவில் அறிமுகமான 'பருத்தி வீரன்' மூலமாகவே கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என கார்த்தி சொல்லாமல் சொல்லியிருந்தார். அதுபோலவே முதல் படத்தில் இருந்தே சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. ஆனாலும், அவர் நடித்த சில படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விருமன்', நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, இந்தப் படம் இன்று காலை ஹெச்டி தரத்தில் யூடியூப்பில் வெளியாகி அதிரவைத்தது. உடனடியாக நீக்கப்பட்டாலும், சூர்யா தரப்பில் இருந்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என இதுவரை தெரியவில்லை.

சார்பட்டா பரம்பரை குறித்து கார்த்தி

சார்பட்டா பரம்பரை குறித்து கார்த்தி

இதுஒருபுறம் இருக்க கார்த்தியின் நடிப்பில் அடுத்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் அடுத்த மாதம் இறுதியில் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கார்த்தியுடன் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாவகவுள்ளது. இதனையடுத்து இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

முதலில் கமிட் ஆனது கார்த்தி தான்?

முதலில் கமிட் ஆனது கார்த்தி தான்?

அட்டக்கத்தியை தொடர்ந்து பா. ரஞ்சித் இரண்டாவதாக இயக்கிய 'மெட்ராஸ்' படத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடித்திருந்தார். ரஞ்சித், கார்த்தி இருவரது கேரியரிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது 'மெட்ராஸ்.' அதேபோல், தமிழ் சினிமாவிலும் இந்தப் படம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மெட்ராஸ் படம் முடிந்ததும் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டிருந்ததாகவும், அதில் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்க முதலில் கமிட் ஆனதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.

இதனால் தான் முடியாமல் போனது

இதனால் தான் முடியாமல் போனது

இதுகுறித்து தொடர்ந்து பேசியுள்ள கார்த்தி, "2014ம் ஆண்டிலேயே சார்பட்டா பரம்பரை படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ரஞ்சித் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்தார். அவர் ஃப்ரியாகும் போது, நான் பொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆகிவிட்டேன். அதனால் எங்கள் முயற்சி கைகூடாமல் போக, ஆர்யா அதில் நடித்தார். இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு சார்பட்டா பரம்பரையில் படத்தில் வரும் ரங்கன் வாத்தியார், டாடி பாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும்" என கார்த்தி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X