சூர்யா, கார்த்தி...: அனுஷ்கா கண்டுபிடித்த 5 வித்தியாசங்கள்!
சென்னை: கார்த்தி மற்றும் சூர்யாவுக்கும் இடையே 5 வித்தியாசங்களை கண்டுபிடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.
அண்ணன் சூர்யா, தம்பி கார்த்தி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளில் தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா ஆகியோர் அடக்கம். அதில் அனுஷ்கா சூர்யாவுடன் சிங்கம் படத்தில் நடித்தார். மேலும் தற்போது சிங்கம் 2விலும் நடிக்கிறார். அதே போன்று கார்த்தி நடித்த சகுனி படத்தில் காமெடி போலீசாக வந்த அனுஷ்கா அலெக்ஸ் பாண்டியனில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சூர்யாவுக்கும், கார்த்திக்கும் இடையே 5 வித்தியாசங்களை கண்டுபிடித்துள்ளார். உங்களைக் கேட்டால் ஆயிரம் வித்தியாசம் சொல்வீர்கள். அது இருக்கட்டும் இப்போ அனுஷ்கா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

கார்த்தி ஒரு ஓட்டவாய்
சூர்யா அமைதியாக இருப்பார். ஆனால் அவரது தம்பியோ சரியான ஓட்டவாய் என்கிறார் அனுஷ்கா.

சூர்யா கொஞ்சம் ரிசவ்ர்ட்
கார்த்தி யாருடனும் எளிதில் பேசிப் பழகிவிடுவார். ஆனால் சூர்யா ரிசர்வ்ட் டைப். அவ்வளவு சீக்கிரத்தில் பழகிவிடமாட்டார்.

கார்த்தி பெட்டர் சிங்கர்
சூர்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கார்த்தி நல்லா பாடுவார்.

சூர்யாவுக்கு திகிலே பிடிக்காது
கார்த்தி பேய் கதைகள் கூறி அனைவரையும் பயப்படச் செய்வார். ஆனால் சூர்யாவுக்கு திகில் என்றாலே பிடிக்காது.

கார்த்தி குட்டீஸ் செல்லம்
சூர்யாவைக் காட்டிலும் சின்ன குழந்தைகள் கார்த்தியிடம் எளிதில் பழகி ஒட்டிக்கொள்வார்கள்.


Click it and Unblock the Notifications











