மூன்றாண்டுகால உழைப்பு சுல்தான்.. நடிகர் கார்த்தி உருக்கமான பேச்சு!

சென்னை : பெரும் எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 2ஆம் தேதி சுல்தான் திரைப்படம் திரையில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருக்க நெப்போலியன், லால், யோகி பாபு,சிங்கம் புலி என பலர் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

முதல் நாள் முதல் காட்சியே ரசிகர்களுடன் அமர்ந்து சுல்தான் படத்தை கண்டு மகிழ்ந்த கார்த்தி மூன்றாண்டுகால உழைப்பை சுல்தான் படத்திற்கு கொடுத்துள்ளோம் என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

ஒரு சேர வெளியாகி

ஒரு சேர வெளியாகி

கார்த்தியின் திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து வயதினரும் பார்க்கக் கூடியதாக உள்ளன. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்க சுல்தான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர வெளியாகி உள்ளது.

பட்டையை கிளப்பிய

பட்டையை கிளப்பிய

தெலுங்கில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த ரஷ்மிகா மந்தனா தமிழில் நடிக்காத போதே எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க எங்கு சென்றாலும் தமிழில் எப்பொழுது நேரடியாக அறிமுகமாவீர்கள் என ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு விடையாக சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

பிஜிஎம் கிங்

பிஜிஎம் கிங்

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் இரண்டாவது படமான சுல்தான் பல போராட்டங்களைத் தாண்டி ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடமிருந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். பிஜிஎம் கிங் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையை கொடுத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Recommended Video

Karthi வாய்ப்பு தேடுறவங்களுக்கு உதவுறாரு | Family Audienceக்கு இந்த Movie | Sulthan Pressmeet
உருக்கமான பேச்சு

உருக்கமான பேச்சு

அறிவித்தது போலவே ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் இத்திரைப்படம் வெளியாக முதல் நாள் முதல் காட்சி பாடி க்ரீன்சினிமாஸ் திரையரங்கில் கார்த்தி, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் உட்பட படக்குழுவினர் பலர் ஒன்றாக ரசிகர்களுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தனர். இப்படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்பொழுது திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இன்று என்னுடைய சுல்தான் படம் வெளியாகி உள்ளது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இந்த தருணத்திற்காக தான் கடந்த 3 ஆண்டுகளாக அயராது உழைத்தோம். இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் மேஜிக் படத்தை பார்க்கும் போது தான் தெரிந்தது. இந்த படத்திற்கு மார்க் போடுவதை விட்டுவிட்டு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழுங்கள் என அளவு கடந்த சந்தோசத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X