மலேசியாவில் விருமன் பட பிரமோஷன்ஸ்.. நடுக்கடலில் புகைப்படம் வெளியிட்ட கார்த்தி!

மலேசியா: நடிகர் கார்த்தியின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் விருமன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

படத்தில் கார்த்திக்கு பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் ஜோடியாகியுள்ளார். பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து சிறப்பான படங்கள் ரிலீசாக உள்ளன. வரும் 12ம் தேதி அவரது விருமன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாகியுள்ளார்.

விருமன் படம்

விருமன் படம்

படத்தை பிரபல இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். இந்தக் கூட்டணி கொம்பன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விருமன் படத்திற்காக இணைந்துள்ளது. மேலும் படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ஆகஸ்ட் 12ல் ரிலீஸ்

ஆகஸ்ட் 12ல் ரிலீஸ்

இந்தப் படம் முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படம் முன்னதாகவே ரிலீசாக உள்ளது. கார்த்தி கிராமத்து கெட்டப்பில் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில், இந்தப் படமும் சிறப்பான வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தயாரிப்பு

சூர்யா தயாரிப்பு

இந்தப் படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யாவே, தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களில் படக்குழு சிறப்பாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக தற்போது மலேசியாவில் தான் உள்ளதாக கார்த்தி அப்டேட் தெரிவித்துள்ளார்.

கடலுக்கு நடுவில் புகைப்படம்

கடலுக்கு நடுவில் புகைப்படம்

மேலும் கடலுக்கு நடுவில் படகில் இருந்தபடி தான் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் காணப்படுகிறார். விருமன் கதாபாத்திரத்திற்கு நேரெதிராக இந்தப் புகைப்படத்தில் கார்த்தி காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X