வந்தியத்தேவனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்… ராஜமெளலியின் மெகா கூட்டணியில் இணையும் கார்த்தி?

ஐதராபாத்: ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

அட்வென்டசர்ஸ் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்

ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்

'பாகுபலி' பிரம்மாண்டமான மேக்கிங்கை பார்ந்து மிரண்டு நின்ற இந்தியத் திரையுலகத்திற்கு, ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் மீண்டும் ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்தார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமாக வசூலை தட்டித் தூக்கியது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கரில் 15 பிரிவுகளில் போட்டியிடுவது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

மகேஷ்பாபுவுடன் கூட்டணி

மகேஷ்பாபுவுடன் கூட்டணி

இதனைத் தொடர்ந்து டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜமெளலி. மகேஷ்பாபுவின் 28வது படமான இதன் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது. 'SSMB 29' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படம் "ஹாலிவுட் தரத்தில் உலகையே சுற்றி வரும் ஆக்‌ஷன் அட்வென்ட்சர் படமாக இருக்கும். இது ஒரு வகையான ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியானா ஜோன்ஸ் படங்களைப் போன்று இருக்கும். ஆனால் இந்திய கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற வகையில் இருக்கும்" என ராஜமெளலி கூறியுள்ளார்.

ராஜமெளலியுடன் இணையும் கார்த்தி

ராஜமெளலியுடன் இணையும் கார்த்தி

ராஜமெளலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு ஜோடியக பாலிவுட் நடிகை ஆலியா பட் கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முக்கியமான பாத்திரத்தில் கார்த்தியை நடிக்கை பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதில், கார்த்தியும் ஓக்கே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவுக்கு இணையான முக்கியமான ரோலில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதன்முறையாக ராஜமெளலி, மகேஷ்பாபு இருவருடனும் கார்த்தி பணிபுரியவுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

ஹாலிவுட் நடிகர்கள்?

ஹாலிவுட் நடிகர்கள்?

முன்னதாக இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பாகுபலி 2ம் பாகத்தை பார்த்து விட்டு பிரபல ஹாலிவுட் நடிகரான சாமுவேல் ஜாக்சன் ராஜமெளலி படத்தில் சின்ன ரோல் கொடுத்தால் கூட நடிக்க ரெடி எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் மகேஷ் பாபு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தோர் கடவுளாக நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தும் இந்தப் படத்தில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜமெளலி, மகேஷ்பாபு, ஹாலிவுட் நடிகர்களுடன் கார்த்தியும் நடிப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X