அண்ணன் சூர்யாவுக்கே இப்படியா?: இது தான் உங்க டக்கா கார்த்தி
Recommended Video
சென்னை: காப்பான் டீஸர் பற்றி கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படத்தின் டீஸர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸானது.

அதை இதுவரை 30 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். டீஸர் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. ஊர், உலகம் எல்லாம் டீஸரை பார்த்து கருத்து சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டது.
இந்நிலையில் கார்த்தி தற்போது தான் காப்பான் டீஸர் பற்றி கருத்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.
கார்த்தியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் என்ன சார் இவ்வளவு சீக்கிரமாவா கருத்து தெரிவிப்பது என்று கிண்டல் செய்துள்ளனர். சூர்யா ரசிகர்களோ, கார்த்தியின் ட்வீட்டால் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துள்ளதுடன் அவரின் அடுத்த படத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
காப்பான் டீஸரில் சூர்யா பேச்சில் மட்டும் அல்ல கெட்டப்பிலும் சிலரை விளாசியுள்ளார். இதனாலேயே படம் பார்க்கும் ஆவலை பலரால் அடக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











