twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கார்த்திக்கு தைரியம் அதிகம்.. இல்லன்னா கைதியில் நடித்திருக்க மாட்டார்'.. ரகசியம் சொல்லும் நரேன்!

    கைதி போன்று ஹீரோயினே இல்லாத ஒரு படத்தில் நடிக்க கார்த்திக்கு பெரிய தைரியம் வேண்டும் என நடிகர் நரேன் கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    ACTOR NAREN : எனக்கு திரும்பவும் வாய்ப்பு குடுத்தது கார்த்தி தான்| KAITHI PRESS MEET|FILMIBEAT TAMIL

    சென்னை: கைதி மாதிரி ஒரு படத்தில் நடிக்க கார்த்திக்கு பெரிய தைரியம் வேண்டும் என நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.

    கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் "கைதி". மாநாகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் நரேன் பேட்டி அளித்துள்ளார். கைதி போன்ற ஒரு படத்தில் நடிக்க கார்த்திக்கு பெரிய தைரியம் வேண்டும் என நரேன் கூறியுள்ளார்.

     இந்த தீபாவளிக்கு 'கைதி' படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்! இந்த தீபாவளிக்கு 'கைதி' படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்!

    மீண்டும் போலீஸ்

    மீண்டும் போலீஸ்

    இதுகுறித்து அவர் கூறியதாவது, " இந்த படத்தில் நான் ஸ்பெஷன் டாஸ்க் போர்ஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். முதல்ல கார்த்தி தான் எனக்கு போன் பண்ணினார். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்ன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார். அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன்".

    நம்பிக்கை இருக்கு

    நம்பிக்கை இருக்கு

    "கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார். அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநாகரம் நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சது இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் பண்ணக்கூடாது. ஆனா லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பரா இருக்கப்போகுதுனு. படம் நல்லா வந்திருக்கு".

    ஆக்ஷன் படம்

    ஆக்ஷன் படம்

    "கைதி ஒரு ஆக்ஷன் படம். படமே ஒரு ஆபரேஷன்ல தான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான் அவ்வளவுதான். ரெண்டாவது அவனுக்கு அடி பட்டிருக்கும். அந்தக்கையோட அவன் என்ன பண்றான். அது தான் படத்தில் என் கதாபாத்திரம்".

    கார்த்தியின் தைரியம்

    கார்த்தியின் தைரியம்

    "படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு. அவருக்கு ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்".

    தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்

    தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்

    "கைதியில் ஒர்க் பண்ணியது சுவாரஸ்யமான அனுபவம். ஷீட்டிங்கே ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. முழுக்க நைட்தான். ஒரு நாள் தூங்கலைனாலும் நமக்கு சோர்வா இருக்கும் தொடர்ந்து 40, 50 நாள்னா பார்த்துகங்க. ஆனா படத்திலேயும் அந்த கேரக்டர் சோர்வா இருக்கும் அதனால அத மெயிண்டைன் பண்ணிட்டேன். கார்த்தி கூட இருந்ததால ரொம்ப ஈஸியா இருந்துச்சு".

    சூப்பரா வந்திருக்கு

    சூப்பரா வந்திருக்கு

    "படம் எடுக்கும் போதே தெரியும் சூப்பரா வந்திருக்கு. முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். முகமூடில அவர் கூட வேலை பார்த்திருக்கேன். இந்தப்படத்தில விஷிவலா மிரட்டிருக்கார். லோகேஷ் கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்ததே சந்தோஷம்தான்".

    ரெண்டும் பிடிக்கும்

    ரெண்டும் பிடிக்கும்

    "இந்த தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம் தான் ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க பிடிக்கும்". இவ்வாறு நரேன் தெவித்துள்ளார்.

    English summary
    In a recent interview actor Naren said that Karthi is so bold to act in a movie like Kaithi which has no heroine.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X