'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
கைதி படத்திற்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்குமோ, அது கிடைத்தே தீரும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பேட்டயும், விஸ்வாசமும் ஒரே நாளில் வெளியாகும் போது பிகிலும், கைதியும் ஏன் ஒரே நாளில் ரிலீசாகக்கூடாது என நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களை மகிழ்விக்க விஜய்யும், கார்த்தியும் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். இதனால் இரு ஹீரோக்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய் - அட்லீ கூட்டணி, நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது பிகில். இந்த படத்திற்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. திரையரங்குகளும் கூடுதலாக கிடைத்துள்ளன.
பிகில் படத்திற்கு எந்தவிதத்திலும் குறையாமல் கார்த்தியின் கைதிக்கும் இந்த தீபாவளி பண்டிகையில் பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
கைதி படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படம் இது. ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் பாடல்கள் கூட கிடையாது. இதனால் ஒரு ராவான படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகில் படத்துடன் கைதி மோதுவது குறித்து கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். "பிகில் ஒரு பெரிய படம். அந்த படத்திற்கு சிங்கத்துக்கு கிடைக்கும் பங்கு போல் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும். அதேசமயம் கைதிக்கும் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும். பேட்டயும், விஸ்வாசமும் ஒரே நாளில் வெளியாகும் போது, பிகிலும் கைதியும் ஏன் ஒரே நாளில் ரிலீசாகக்கூடாது" என கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கார்த்தியின் இந்த தெளிவான பதிலால் ரசிகர்களிடையே நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டுமே தமிழ் படங்கள் தான். இரண்டு ஹீரோக்களும் அற்புதமான நடிகர்கள் தான். எனவே இந்த தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கன்பார்ம்.


Click it and Unblock the Notifications











