எதிர்பார்த்தது வீண்போகல... கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் அதே தான்!
Recommended Video
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளி சரவெடியாக வெளியான கார்த்தியின் கைதி 100 கோடி வசூலை கடந்து வெற்றிநடை போடுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதமே அடுத்த ஆக்ஷனுக்கு கார்த்தி தயாராகி விட்டார். அண்ணி ஜோதிகாவுடன் முதன்முறையாக கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு, நாம் முன்னதாக சொன்ன 'தம்பி' டைட்டிலே தான்.

கார்த்தியின் 'தம்பி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை அண்ணன் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.
சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியாகி மாதவனுக்கு ஆக்ஷன் அவதாரத்தை கொடுத்த தம்பி படத்தின் டைட்டில் தற்போது, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி த்ரில்லர் படத்திற்கு கிடைத்துள்ளது.
வியாகாம் 18 மற்றும் பேரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விரைவில் படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு சொன்ன மாதிரியே விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைத்து, சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துடன் கார்த்தியின் தம்பி மோதும் என தெரிகிறது.
பாபநாசம் படத்தை போலவே இந்த படத்திலும் பல ட்விஸ்ட்டுகள் இருக்கும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழில் தம்பி என வெளியாகவுள்ள இந்த படம் தெலுங்கில் தொங்கா என உருவாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான கைதி படமும் வசூலை வாரி குவித்துள்ள நிலையில், தம்பி படமும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











