96 மேஜிக் தம்பி படத்திலும் இருக்குமா? கோவிந்த் வசந்தா இசையில் நாளை நனைய தயாராகுங்கள்!

Recommended Video

THAMBI - First Look Poster | Karthi | Jyothika | கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் வெளியீடு

சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் நிச்சயம் தம்பி படத்திலும் மேஜிக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் கார்த்தியை திரையில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஹாட் ஸ்டாரில் கைதி

ஹாட் ஸ்டாரில் கைதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் பிகிலுடன் வெளியான கார்த்தியின் கைதி படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ஹாட் ஸ்டாரில் ரிலீசாகி உலகம் முழுவதும் கைதி திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

முதல் முறை

முதல் முறை

அண்ணன் சூர்யாவின் மனைவி மற்றும் நடிகை ஜோதிகாவுடன் முதல் முறையாக கார்த்தி நடித்துள்ளார். சூர்யா, ஜோதிகா நடிப்பை திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள், கார்த்தி, ஜோதிகா நடிப்பை விரைவில் திரையில் காண உள்ளனர்.

ஜீத்து ஜோசப்

ஜீத்து ஜோசப்

மோகன் லால் நடிப்பில் த்ரிஷ்யம் படத்தை மலையாளத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த ஜீத்து ஜோசப், அதே படத்தை தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து பாபநாசம் எனும் பெயரில் இயக்கி இங்கேயும் வெற்றி பெற்றார். பாபநாசம் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தை இயக்கியுள்ளார். மேலும், பாலிவுட்டில் வேதிகா நடிப்பில் தி பாடி படத்தையும் இயக்கியுள்ளார்.

கோவிந்த் வசந்தா

கோவிந்த் வசந்தா

மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் இசையமைத்து வரும் கோவிந்த் வசந்தா இசையில் கடந்த ஆண்டு தமிழில் அசுரவதம், 96 மற்றும் சீதக்காதி என மூன்று படங்கள் வெளியாகின. இதில், விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இரண்டாவது நாயகனாக கோவிந்த் வசந்தாவின் இசை இருந்தது தான் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். இந்த ஆண்டு உறியடி 2 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தற்போது கார்த்தியின் தம்பி படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

சென்சார்

வயகாம் ஸ்டுடியோஸ் 18 தயாரிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஹீரோவுடன் போட்டியா?

ஹீரோவுடன் போட்டியா?

கார்த்தியின் தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் ஜீவாவின் சீறு படங்கள் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம்பி இசை

கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள தம்பி பாடல் நாளை வெளியாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தம்பி பட போஸ்டரில் கார்த்திக் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிகிலா விமல் இடம்பெற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X