Karthi: இதுதான் ஜப்பான் எஃபெக்ட்... மொத்தமாக மாறிய கார்த்தி... அதிரும் மெய் அழகன் ஷூட்டிங் ஸ்பாட்!

சென்னை: கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோ கார்த்தி தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார். அதன்படி கார்த்தி 26, கார்த்தி 27 என்ற டைட்டிலில் உருவாகும் இந்த இரண்டு படங்களின் டைட்டில் பற்றியும் அப்டேட் வெளியாகின. இந்நிலையில் கார்த்தி 27 ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

மொத்தமாக மாறிய கார்த்தி
கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியானது. கடந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸான ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரொமபவே அப்செட்டான கார்த்தி தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி கார்த்தியின் 26வது படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு வா வாத்தியாரே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 Karthi: Karthi Selfie With Fans At Karthi 27 Shooting Spot

இன்னொரு பக்கம் 96 இயக்குநர் பிரேம் குமாருடன் இணைந்துள்ளார் கார்த்தி. இது கார்த்தியின் 27வது படமாக உருவாகி வருகிறது. கார்த்தியுடன் அரவிந்த் சாமி இணைந்துள்ள இந்தப் படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்து வருகின்றனர். கார்த்தி 27 பட ஷூட்டிங்கும் மதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு மெய் அழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகாத நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கார்த்தியின் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. மதுரையில் நடைபெற்று வரும் மெய்யழகன் படப்பிடிப்பில் இருக்கும் கார்த்தியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். அப்போது அவர்களுடன் கார்த்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த போட்டோவில் கார்த்தியின் லுக்கை பார்த்த ரசிகர்கள், இதுதான் ஜப்பான் எஃபெக்ட்டா என கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர்.

அதேபோல் இது பருத்திவீரன் கெட்டப் மாதிரி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்னர் அமீரின் பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இயக்குநர் அமீரை திருடன் என பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து பலரும் ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம் பருத்திவீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, இந்த பஞ்சாயத்து குறித்து இதுவரை வாய் திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X