Karthi: "லியோ யுனிவர்ஸில் இணையும் ஜப்பான்..” விஜய் - கார்த்தி சென்டிமெண்ட் ஒர்க்அவுட் ஆகுமா..?

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

இதனை முன்னிட்டு வரும் 28 தேதி ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாம்.

முன்னதாக இந்தப் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக ஜப்பான் டீசர் விஜய்யின் லியோ படத்துடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 Karthi: Karthis Japan Teaser will be released on Oct 18

ஜப்பான் டீசர் அப்டேட்: கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் கடந்தாண்டு வெளியாகின. இந்த மூன்றுமே கார்த்தி கேரியரில் மிக முக்கியமான படங்களாக அமைந்தன. இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் மட்டுமே வெளியானது. அதனைத் தொடர்ந்து தனது 25வது படத்தில் பிஸியாகிவிட்டார் கார்த்தி.

அதன்படி, ரஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் ஜப்பான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜப்பான் படத்தில் கார்த்தி வித்தியாசமான கெட்டப்பில் செம்ம வெரைட்டியாக நடித்துள்ளார். இதனால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான 24 படங்களின் இயக்குநர்களை சிறப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதாம்.

அதேநேரம், இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே ஜப்பான் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, வரும் 18ம் தேதியே ஜப்பான் டீசர் வெளியாகிறது. முக்கியமாக இந்த டீசர் விஜய்யின் லியோ ரிலீஸாகும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி வெளியாகிறது. லியோ சிங்கிளாக ரிலீஸாகவுள்ளதால், அப்போது ஜப்பான் டீசர் வெளியானால் நல்ல ரீச் ஆகும் என தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் அயலான் டீசரும் லியோ ரிலீஸாகும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என சொல்லப்பட்டது. இப்போது கார்த்தியின் ஜப்பான் டீசரும் விஜய்யின் லியோவுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லியோ லோகேஷ் யுனிவர்ஸில் உருவாகியிருந்தால், அதில், கைதி டில்லி கேரக்டர் இடம்பெற்றிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை லியோ LCU இல்லையென்றால், ஜப்பான் டீச்ர் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X