மறுபடியும் கொம்பன்.. அதே கார்த்தி.. தயாரிக்கப் போவது.. அடடே.. நம்ம "அண்ணாச்சி"யா!
சென்னை : கார்த்தியின் கொம்பன் 2 திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பல படங்கள் கைவசம்
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

உறுதியாகி உள்ளது
இந்த படங்களை தொடர்ந்து கார்த்தியின் 23வது படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்குவது கிட்ட தட்ட உறுதியாகி விட்டது.

மீண்டும் அதே கூட்டணி
2015ம் ஆண்டு வெளியாகி நல்ல வரபேற்பை பெற்ற கொம்பன் திரைப்படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். இத்திப்படத்தில் லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் இவர்களையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கொம்பன் பாகம் 2 உருவாக உள்ளது. இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் அறிவிப்பு
இந்நிலையில், இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











