‘கொம்பனில்’ மீண்டும் கிராமத்து இளைஞனாக கார்த்தி... ஜோடி லட்சுமிமேனன்

சென்னை:புதிய படமொன்றில் கார்த்தி ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகுமாரை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் அடுத்த படத்திற்கு கொம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க உள்ளார். இசை யுவன் சங்கர் ராஜா.

ஜூன் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப் பட உள்ளது. ராமநாதபுரத்தைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது கொம்பன். இப்படத்தில் ராஜ்கிரண் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

மீண்டும் கிராமத்து இளைஞனாக...

மீண்டும் கிராமத்து இளைஞனாக...

பருத்தி வீரன் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்க இருக்கும் அசல் கிராமத்துப் படம் எனக் கூறப்படுகிறது. வித்தியாசமான கிராமத்து இளைஞனாக இதில் கலக்கப் போகிறாராம் கார்த்தி.

ராமநாதபுரம்...

ராமநாதபுரம்...

முழுப்படமும் ராமநாதபுரத்திலேயே படமாக்கப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரே மூச்சில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆக்‌ஷன் கதை...

ஆக்‌ஷன் கதை...

ஆக்‌ஷன் கதைக்களமான இப்படத்தில் தனது கேரக்டருக்கான நடிப்பு ஒத்திகையே ஏற்கனவே ஆரம்பித்து விட்டாராம் கார்த்தி.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

இதற்கிடையே அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் முடியும் தருவாயில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X