»   »  பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ்... சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார் கார்த்தி!

பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ்... சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்ணன் சூர்யாவின் வழியில் தானும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார் நடிகர் சூர்யா.

பருத்தி வீரன்', ‘பையா', ‘கொம்பன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்தி. இவருடைய அண்ணன் நடிகர் சூர்யா, சமீபத்தில் சொந்தமாக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இந்நிறுவனம் மூலம் ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே' படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் ரசிகர்களிடையே ஓரளவுவரவேற்பை பெற்றது. அடுத்து ‘ஹைக்கூ', ‘24' என இவர் நடிக்கும் படங்களைத் தயாரித்து வருகிறார்.

பிரின்ஸ்

பிரின்ஸ்

இந்நிலையில், நடிகர் கார்த்தியும் தனது அண்ணனைப் பின்பற்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம்.

காஷ்மோரா

காஷ்மோரா

இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக முதன்முதலாக இவர் நடித்து வரும் ‘கஷ்மோரா' படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

ஸ்டுடியோ கிரீன்

ஸ்டுடியோ கிரீன்

சிவகுமார் குடும்பத்தில் ஏற்கெனவே ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம்தான் பருத்தி வீரன் தொடங்கி, கொம்பன் வரை கார்த்தி நடித்த படங்களைத் தயாரித்தது.

5 வது நிறுவனம்

5 வது நிறுவனம்

சிவகுமார் குடும்பத்தினர் ஆரம்பித்துள்ள 5வது பட நிறுவனமாகும். ஏற்கெனவே ஸ்டுடியோ கிரீன், ட்ரீம் வாரியர், பொடன்ஷியல் மற்றும் 2 டி நிறுவனங்கள் உள்ளன. இப்போது புதிதாக பிரின்ஸ் புரொடக்ஷன் இதில் இணைந்துள்ளது.

Read more about: karthi கார்த்தி
English summary
Actor Karthi has launched a new production house titled Prince Productions.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil