மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி.. தலைப்பு: எண்ணி ஏழு நாள்!!
சென்னை: மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. படத்துக்கு எண்ணி ஏழு நாள் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க, சுபாஷ் சந்திர போஸின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த பையா படம் சில ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்தது.

அழுக்கு கார்த்தியை ஐடி பையனாக மாற்றியவர்
பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் என தொடர்ந்து அழுக்குப் பையனாக, முரட்டு இளைஞனாக வந்த கார்த்தியை, ஐடி இளைஞராகக் காட்டி, பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்தது இந்தப் படம்.

தேவை வெற்றி
இப்போது ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என தொடர் ஏமாற்றங்களை எதிர் கொண்டுவரும் கார்த்திக்கு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. இதற்காகவே காளி படத்தையும் கிடப்பில் போட்டிருக்கிறார்.

எண்ணி ஏழு நாள்
இந்த நிலையில் லிங்குசாமியுடன் மீண்டும் கூட்டணி போட்டிருக்கிறார் கார்த்தி. சூர்யாவை வைத்து அவர் இயக்கிக்கொண்டிருக்கும் அஞ்சான் திரைப்படம் முடிந்ததும், கார்த்தி நடிப்பில்‘எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை இயக்குகிறார் லிங்கு.
இதில் முற்றிலும் வித்தியாசமான கார்த்தியைப் பார்க்கலாம் என்கிறார் லிங்குசாமி.

பிழை இருக்கே லிங்குசாமி...
எல்லாம் சரி... எண்ணி ஏழு நாள் என்பது இலக்கணப் பிழையாச்சே... எண்ணி ஏழு நாட்கள் என்றல்லவா இருக்க வேண்டும்... அந்த ஏழு நாட்கள் தலைப்பையாவது நினைவுபடுத்திப் பார்க்க வேண்டாமா!!


Click it and Unblock the Notifications











