வெறும் 30 நாள் கொடுங்க.. கார்த்தியிடம் கேட்ட லோகேஷ் கனகராஜ்!

கைதி படத்தின் மாபெரும் வரவேற்புக்கு பிறகு கைதி 2 படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியிடம் வெறும் 30 நாளில் கைதி 2 படம் எடுத்துக் கொடுப்பதாக கூறியுள்ளாராம

Recommended Video

வெறும் 30 நாள் கொடுங்க.. கார்த்தியிடம் கேட்ட லோகேஷ் கனகராஜ்!

சென்னை: தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ள கைதி படத்திற்கு தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு ஃபேஸ்புக் லைவ்வில் பதிலளித்து வருகிறார் நடிகர் கார்த்தி.

கைதி 2 படம் நிச்சயம் நடக்கும் என நடிகர் கார்த்தி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

ரீமேக்

ரீமேக்

கைதி படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால், கைதி படம் இந்தி மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய இரு பிரபலங்கள் கார்த்தியின் கைதி படத்திற்கு இப்போதிலிருந்தே போட்டி போட துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

மகளை சந்தித்தாரா டில்லி

மகளை சந்தித்தாரா டில்லி

ஒரு நாள் இரவு முழுவதும், போலீஸ்காரர்களையும், கல்லூரி மாணவர்களையும் காப்பாற்ற போராடும் நடிகர் கார்த்தி, அடுத்த நாள் காலையில் தனது மகளை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பை கிளைமேக்ஸில் பூர்த்தி செய்துள்ளார். கார்த்தியின் குழந்தையாக கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலில் குழந்தையாக நடித்த மோனிகா, கிளைமேக்ஸ் காட்சியில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அழவைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

ஃபேஸ்புக் லைவ்வில் சுல்தான் படத்தை தொடர்ந்து மணிரத்னம் சார் படத்தில் நடிக்க போவதை உறுதிபடுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி. 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள கார்த்தி, இதுவரை எந்த இயக்குநருடனும் இரண்டாவது படத்தில் நடித்தது இல்லை. அந்த தியரியை காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் மூலம் கார்த்தி பிரேக் செய்ய உள்ளார்.

சூர்யா பாராட்டு

சூர்யா பாராட்டு

கைதி படத்தை நடிகர் சூர்யா பார்த்தாரா, என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, தியேட்டரில் பார்த்துவிட்டு, படக்குழுவினரையே அண்ணன் சூர்யா பாராட்டியதாக கூறினார். சூர்யாவுடன் இணைந்து படம் எப்போது பண்ணுவீர்கள் என்ற கேள்விக்கு, விரைவில் அதுகுறித்த திட்டம் இருப்பதாக தெரிவித்தார்.

30 நாள் போதும்

30 நாள் போதும்

கைதி படம் 62 இரவுகளில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கைதி 2 படத்திற்கு வெறும் 30 நாள் மட்டும் கொடுங்க கார்த்தி, படத்தை முடிச்சிடுறேன்னு லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாகவும், விரைவில் கைதி 2 படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என அதுகுறித்த கேள்விகளை கேட்ட ரசிகர்களுக்கு கார்த்தி உறுதியளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X