சகுனி வில்லன் சலீம் கவுஸ் நீக்கம்... பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம்!
கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படமான சகுனியில் வில்லாக நடிக்கிறார் பிரகாஷ் ராஜ்.
கடைசி நேரத்தில் நடந்த மாறுதல் இது. அதற்கு முன் படத்துக்கு வில்லனாக நடிக்க வந்தவர் சலீம் கவுஸ். சின்னக் கவுண்டர், வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித்த அதே சலீம் கவுஸ்தான்.
படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது, புதிய திருப்பமாக சலீம் கவுஸ் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் பிரகாஷ் ராஜ் புதிய வில்லனாகிவிட்டார்.
படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே, கார்த்தி - சலீம் கவுஸ் தொடர்பான காட்சிகளில் ஈர்ப்பே இல்லை என சிவகுமாரும் சூர்யாவும் கூறி வந்தார்களாம்.
படத்துக்கு வில்லன் மிக முக்கியம். அப்போதுதான் ஹீரோ எடுபடுவார். எனவே சலீமுக்கு பதில் பிரகாஷ் ராஜை ஒப்பந்தம் செய்யுங்கள் என சூர்யா வெளிப்படையாகவே இயக்குநரிடம் கூறிவிட, பிரகாஷ் ராஜ் உள்ளே வந்தாராம்.
ஷங்கர் தயாள் இயக்கும் இப்படத்தில் ப்ரணிதா, சந்தானம் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











