Vaa Vaathiyaar Box Office Day 2: விமர்சகர்கள் என்ன சொன்னா என்ன.. பாக்ஸ் ஆபீஸில் படம் ஓட்டும் வா வாத்தியார்
சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் வா வாத்தியார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை கடந்த ஆண்டே ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில பல காரணங்களாலும் நீதிமன்ற உத்தரவினாலும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. எல்லா பிரச்னைகளையும் முடித்துவிட்டு படத்தை ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் செயதது படக்குழு. இந்நிலையில் படம் முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாளில் அதிக வசூலை அள்ளி உள்ளது.
தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர் தனது பேரனை, எம்.ஜி.ஆர் திரையில் என்னவெல்லாம் திரையிலும் தரையிலும் போதித்தாரோ அவற்றை எல்லாம் சொல்லி வளர்க்கிறார். ஆனால் பேரனுக்கோ தாத்தாவின் இந்த எம்.ஜி.ஆர் ஃபோபியாவால் எம்.ஜி.ஆர் மீது வெறுப்பும், வில்லன் நம்பியார் மீது ஈர்ப்பும் ஏற்படுகிறது. இதனால் நம்பியாரை போல வில்லாதி வில்லனாக யோசித்து, எல்லா வேலைகளையும் செய்கிறார். அதுவும் காவல்துறை அதிகாரியாக இருந்து கொண்டு, நம்பியார் போல செயல்படுகிறார். ஒரு கட்டத்தில் இது அவரது தாத்தாவுக்கு தெரியவர, அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் படத்தின் ஒன் லைன்.

படம் எப்படி இருக்கு?: நலன் குமாரசாமி என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, காமெடிக்கு பஞ்சம் இருந்தால் அது நலன் குமாரசாமியின் படமாகவே இருக்காது என்று ரசிகர்கள் மத்தியில் டார்க் காமெடி படங்களின் ஓ.ஜி-ஆக இருப்பவர் நலன். அதேபோல் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் டார்க் காமெடியை மிக்ஸ் செய்து படத்தை இயக்கி உள்ளார்.
வசூல் கணக்கு: படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்தாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் படத்தின் வசூலானது முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாளில் அதிக வசூல் கிடைத்துள்ளது. அதாவது படம் இரண்டாவது நாளான நேற்று பாக்ஸ் ஆபீஸில் இந்தியாவில் மட்டும் சுமார், ரூபாய் 2.25 கோடிகள் வசூலித்திருக்கும் என்று சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இதுவரை படம் ரூபாய் 3.90 கோடிகள் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழுவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் விடுமுறையில் படம் ஓரளவுக்கு நல்ல வசூலை அள்ளும் என்று படக்குழு நம்புகிறது.



Click it and Unblock the Notifications











