சரியான ஓட்டவாயா இருக்காரே கார்த்தி.. அப்போ பொன்னியின் செல்வன்.. இப்போ தளபதி 67, கைதி 2!
சென்னை: தளபதி 67 அப்டேட்டை லோகேஷ் கனகராஜே மென்னு முழுங்கி வரும் நிலையில், பளிச்சென அதை போட்டு உடைத்தது மட்டுமின்றி, அடுத்த ஹாட்டான அப்டேட்டையும் போட்டு உடைத்திருக்கிறார் கார்த்தி.
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள விருமன் நாளை மறுநாள் உலகமெங்கும் வெளியாகிறது.
அந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அதிதி ஷங்கர் உடன் பங்கேற்று வருகிறார்.

செம ஜாலி
நடிகர் கார்த்தி மற்றும் ஹீரோயின் அதிதி ஷங்கர் இருவருமே வால் சேட்டை பிடித்தவர்கள் என்பதை அவர்கள் கொடுக்கும் பேட்டிகளிலேயே பார்க்க முடிகிறது. விருமன் படத்திலும் அவர்களது கதாபாத்திரம் அப்படித்தான் இருக்க உள்ள நிலையில், அந்த வைபை நல்லாவே செட் பண்றாங்க, ஒருவர் பற்றி ஒருவர் கலாய்த்துக் கொண்டும் உண்மையை எல்லாம் உளறியவாறும் பேட்டி அளித்து ரசிகர்களை ஜாலி மோடுக்கு கொண்டு செல்கின்றனர்.

தளபதி 67 அப்டேட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜே தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அப்டேட் கேட்டு டார்ச்சர் பண்றாங்கப்பான்னு சோஷியல் மீடியாவில் இருந்தே தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார். ஆனால், நடிகர் கார்த்தி போகிற போக்கில் தளபதி 67 படத்தின் தரமான அப்டேட்டை அப்படியே அடித்து விட்டு சென்றிருக்கிறார்.

கன்ஃபார்ம் பண்ண கார்த்தி
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை பண்ணப் போகிறார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் நடிகர் கார்த்தி. தளபதி 67 படமும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸ் தான் என்பதால், நிச்சயம் இந்த படத்தில் டில்லியின் என்ட்ரி இருக்கும் என்றும் ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்து வருகின்றனர்.

கைதி 2
அந்தவொரு அப்டேட் மட்டுமின்றி அடுத்ததாக தளபதி 67 படம் முடிந்த உடன் கைதி 2 படத்தை அடுத்த ஆண்டு பண்ணப் போகிறோம் என்பதையும் வெளிப்படையாக கார்த்தி பேசிய நிலையில், ரசிகர்கள் இவர் சரியான ஓட்டவாயா இருப்பாரு போல, ரொம்ப மனுஷன் இப்படி அப்டேட்டை எல்லாம் வெளிப்படையா சொல்றாரே ரொம்ப நன்றி சார் என கார்த்தியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வனுக்கும் இதேதான்
இதற்கு முன்னால், பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பொன்னி நதி பாடல் வெளியீட்டின் போது பேசிய நடிகர் கார்த்தி, வெறும் 120 நாட்களில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் மணிரத்னம் இயக்கி முடித்து விட்டார் என அந்த ரகசியத்தையும் அப்படியே போட்டு உடைத்து அம்பலப்படுத்தி விட்டார்.
Recommended Video

விருமன் வசூல்
பொன்னியின் செல்வன், தளபதி 67 மற்றும் கைதி 2 என அடுத்தடுத்த அப்டேட்களை நடிகர் கார்த்தி ஒன்றும் தெரியாமல் சொல்லவில்லை என்றும் இதெல்லாம் விருமன் படத்தின் வசூலாக மாறும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என ஹாட்ரிக் அடிப்பாரா கார்த்தி என்றும் எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன.


Click it and Unblock the Notifications











