»   »  சிங்கத்தை இயக்க ஆசைப்படும் சிறுத்தை: ஓகே சொல்வாரா சூர்யா?

சிங்கத்தை இயக்க ஆசைப்படும் சிறுத்தை: ஓகே சொல்வாரா சூர்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிங்கத்தை இயக்க ஆசைப்படும் சிறுத்தை: ஓகே சொல்வாரா சூர்யா?- வீடியோ

சென்னை: அண்ணன் சூர்யாவை வைத்து படம் இயக்கும் ஐடியா கார்த்தியிடம் உள்ளதாம்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வினோத் அழைத்தால் மீண்டும் அவர் படத்தில் நடிக்க தயார் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கார்த்தி ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம் வருமாறு,

கல்லூரி

விஜய் பற்றி சில வார்த்தைகள் கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு கார்த்தி, விஜய் சார் அண்ணாவுடன் லயோலா கல்லூரியில் படித்தபோதில் இருந்து தெரியும். ரொம்ப எளிமையானவர் ஆனால் தன்னம்பிக்கை அதிகம் என்றார்.

தல

அஜீத் பற்றி கூறுமாறு ரசிகர் ஒருவர் கேட்க கார்த்தி கூறியதாவது, அஜீத் ஒரு பக்கா ஜென்டில்மேன். அவரை சந்தித்த பிறகு உங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றார்.

இயக்கம்

சூர்யாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கார்த்தி அளித்த பதில், நான் உதவி இயக்குனராக இருந்தபோது அண்ணனுக்காக ஒரு ஸ்க்ரிப்ட் எழுதினேன். அவரை என் ஸ்க்ரிப்ட் மூலம் இம்பிரஸ் செய்தால் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தீரன்

பருத்திவீரன், பையா, தீரன் ஆகிய மூன்று படங்களில் உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டதற்கு பருத்திவீரன் என்று பதில் அளித்துள்ளார் கார்த்தி.

சிவக்குமார்

அப்பா சிவக்குமார் நடித்த படங்களில் கார்த்திக்கு பிடித்தது ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவியாம்.

English summary
Karthi had a chat session with his fans on twitter last night. He expressed his desire to direct Anna Suriya someday. He said that he even wrote a script for Suriya during his assistant director days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil