ஸ்பை த்ரில்லர்.. சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்ட போகும் கார்த்தி.. லீக்கான தகவல்!
சென்னை: சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரும்புத்திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கினார்.
இந்நிலையில் முதல் முறையாக நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

ஆக்ஷன் த்ரில்லராக
இதில் நடிகர் கார்த்தி நீண்ட தாடி நீண்ட முடி என வேற லுக்கில் இருந்தார். இப்படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்றும், போலீஸ் மற்றும் உளவாளி என அழுத்தமான கதைக்களமாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது.

பிஎஸ் மித்ரன்
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு கார்த்தி போலீஸ் அதிகாரியாக இருப்பார் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நிறைய சிக்கல்கள் மற்றும் அற்புதமான தருணங்கள் நிரம்பியிருக்கும் என்று இயக்குநர் மித்ரன் தெரிவித்துள்ளார்.

இன்று படப்பிடிப்பு
ஏற்கனவே நடிகர் கார்த்தி சிறுத்தை மற்றும் காஷ்மோரா ஆகிய படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
இந்தப் படம் சென்னை, மைசூர் மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சர்தார் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசைமைக்கிறார். ஏற்கனவே இப்படத்திற்கு இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார் ஜிவி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











